இனி விமானத்திலும் நின்றுகொண்டே பயணம்? நீங்க கனவிலும் நினைக்காத ஒன்று.! புது டைப் விமான சீட் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

ரோம்: விமான டிக்கெட் விலை கிட்டதட்ட பஸ் டிக்கெட் விலைக்கு வந்தால் எப்படி இருக்கும்.. இந்த கனவு விரைவில் சாத்தியமாகப் போகிறது. ஆனால், அதில் ஒரே சிக்கல் நாம் விமானத்திலேயே நின்று கொண்டு போக வேண்டும் என்பது தான். இத்தாலி நிறுவனம் விமானங்களுக்கான புதிய வகை இருக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நாம் கிட்டதட்ட விமானத்தில் நின்று கொண்டு தான் போக வேண்டும்.

நமது நாட்டில் விமான பயணங்கள் மெல்ல அதிகரித்தே வருகிறது. ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வேகமாகச் செல்ல முடியும் என்பதால் பலரும் விமான பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும், விமான டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் நமது நாட்டில் இன்னுமே பலரும் விமானச் சேவையைப் பயன்படுத்த யோசிக்கிறார்கள்.

Standing Seats in Air Travel The Future of Flying or a Step Too Far

குறைந்த விலை டிக்கெட்

ஆனால், வெறும் ரூ.500 அல்லது அதற்கும் குறைவாக ரேட்டில் விமான டிக்கெட் கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.. உண்மையில் அது சூப்பராக இருக்கும் தானே.. இதெல்லாம் நடக்குமா என நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால், விரைவிலேயே சாத்தியமாக இருக்கிறது. வரும் 2026 முதல் ஐரோப்பாவில் புதிய வகை சீட்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் குறைந்த ரேட்டில் விமான பயணங்களை நம்மால் மேற்கொள்ள முடியும். ஆனால், இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கு.. அதாவது இதில் நீங்கள் நின்று கொண்டே பறக்க வேண்டியிருக்கும். முதற்கட்டமாக ஐரோப்பாவில் இயங்கும் சில லோ காஸ்ட் விமான நிறுவனங்கள் இந்த சீட்களை அறிமுகப்படுத்தவுள்ளன. அங்கு இவை வெற்றி அடைந்தால் விரைவிலேயே இந்தியா உட்பட இதர ஆசிய மார்க்கெட்களிலும் இது வரும்.

நின்று கொண்டே பயணம்

ஸ்கைரைடர் 2.0 என்று இந்த இருக்கைகளை விளம்பரப்படுத்துகிறார்கள். இத்தாலியைச் சேர்ந்த ஏவியோ இன்டீரியர்ஸ் என்ற நிறுவனம் இந்த சீட்களை வடிவமைத்துள்ளன. இந்த சீட்டில் பயணிகள் சுமார் 45 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். பெரும்பாலும், கால் தசைகளே நமது வெயிட்டை தாங்கி பிடிக்கும். அத்தோடு பாதுகாப்பிற்கு ஒரு சீட் பெல்ட்டையும் கொண்டுள்ளது.

Standing Seats in Air Travel The Future of Flying or a Step Too Far

எப்போது முதல்?

என்ன சீட் இப்படி இருக்கு.. இது பாதுகாப்பாக இருக்குமா.. வானத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது திடீரென எதாவது ஆனால் சமாளிக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம். ஆனால், இது தேவையான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி இருப்பதாகவும் ஏவியோ இன்டீரியர்ஸ் தெரிவித்துள்ளது. 2026 முதல் இந்த சீட்களை விமான நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது.

எப்படி குறையும்

இந்த சீட்களை பொருத்தினால் வழக்கமான எகானாமி சீட்களை காட்டிலும் 20% சீட்களை கூடுதலாக வைக்கலாம். அதாவது 100 எகானாமி சீட் இருக்கும் இடத்தில் இந்த சீட்களில் 120ஐ வைக்கலாம். இதன் மூலம் அதிக பேரை ஏற்ற முடியும். மேலும், இது வழக்கமான சீட்களை காட்டிலும் பாதி எடை மட்டுமே கொண்டதாக இருக்கிறது. இதனால் எரிபொருள் சேவையும் கணிசமாகக் குறையும். மேலும், கிளீனிங், மெயிடன்ஸ் என அனைத்துமே சீக்கிரம் முடித்துவிட முடியும். இதனால் அதிக நேரம் விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த விமான டிக்கெட் விலையும் கணிசமாகக் குறையும். அப்றோம் என்ன விமானத்தில் கூட சீக்கிரம் நம்ம பசங்க புட் போர்ட்டை ஆரம்பித்துவிடுவாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+