Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐரோப்பாவை தாக்கிய 'லியோனார்டோ' புயல்! தென் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை!

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் 'லியோனார்டோ' புயல் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் ஒரே வாரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 800 லிட்டர் மழை பெய்திருக்கிறது இது பொதுவாக அங்கு ஓராண்டில் பெய்யும் மழையின் அளவாகும்.

அதேபோல போர்ச்சுக்கலில் பலத்த காற்றோடு பெய்த மழையால், டாகஸ் ஆற்றின் நீர்மட்டம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. போர்ச்சுக்கலின் அலெண்டெஜோ பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர், தனது காரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

Storm Leonardo

ஸ்பெயினின் மாலகா மாகாணத்தில், தனது நாயே காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல ஸ்பெயினில் கிரேஸலேமா நகரில் ஒட்டுமொத்த மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக 2 நாடுகளிலும் சேர்த்து 7,000க்கும் அதிகமானோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ஆண்டலூசியா முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாலகா விமான நிலையத்திற்கு வர வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, 150-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த கொடூரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையம், 'லியோனார்டோ' புயலை தொடர்ந்து, 'மார்த்தா' எனும் மற்றொரு புயல் உருவாகும் என்றும், அடுத்த வார இறுதியில் இது இரு நாடுகளையும் தாக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இரு நாடுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் ஏற்கெனவே முழுமையாக உயர்ந்திருப்பதால், இனி மழை பெய்தால் மிக கடுமையான வெள்ள அபாயமும், அதேபோல நிலச்சரிவும் தீவிரமடையும் என்றும் அச்சம் நிலவி வருகிறது.

ஐரோப்பாவில் கனமழைக்கு புயல் காரணமாக இருக்கும் நிலையில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு லா நினா காரணமாக கனமழை பெய்திருக்கிறது. இந்நாட்டில் பெய்த கனமழை காரணமாக மொத்தமுள்ள 32 மாகாணங்களில் 31 மாகணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கொலம்பியாவின் கோர்டோபோ மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 70% நிலப்பரப்பு முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. சினு மற்றும் மாக்டலேனா ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கரையோர மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தமாக 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+