சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ட்ரம்ப்.. ஒரே ஒரு கால்வாயால் உலக சந்தையில் கலவரம்! எகிறும் எண்ணெய்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக மேற்கு ஆசியப் பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் பதற்ற நிலை உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணை ( Strait of Hormuz) வழியாக எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

ஹார்மூஸ் நீரிணை தான் உலக நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகின் பல நாடுகள் தினசரி பயன்படுத்தும் எண்ணெயின் பெரிய பகுதி இந்த வழித்தடம் மூலமாகவே அனுப்பப்படுகிறது.

iran us Oil Price

அதனால் இந்த பாதையில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால்கூட உலக சந்தையில் அதன், தாக்கம் உடனடியாக உலக வர்த்தகத்தில் எதிரொலிக்கத் தொடங்கும். கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தடைகள் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

ஹார்மூஸ் நீரிணை

இந்த அச்சம் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே தொடர்ந்து உருவாகி வந்தது. இதற்கிடையில் அந்த கடற்பாதையை மீண்டும் அடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் வெளியாகியவுடன் சந்தையில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் விலை உயர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, எதிர்காலத்தில் எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமே ஆகும்.

உலக சந்தை

ஏற்கனவே சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எண்ணெய் கப்பல்கள் பயணம் செய்யும் நேரம் தாமதமாகியுள்ளது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் கிடைக்கும் அளவு குறையக்கூடும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால், சந்தையில் நிலவும் குழப்பம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது எப்போது நடக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

எண்ணெய் விலை உயர்வு

இந்நிலையில் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டிருக்கும்போது, தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. பொதுவாக உலக சந்தையில் பதற்றம் அதிகரிக்கும் போது தங்கம் விலை உயர்வது வழக்கம். ஆனால் இம்முறை அது பெரிய அளவில் உயரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உலக சந்தையில் பயன்படுத்தப்படும் முக்கிய நாணயமான டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக பொருளாதாரம்

டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது தங்கம் வாங்கும் அளவு குறையும். இதன் காரணமாக தங்கம் விலை அதிகமாக உயராமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் உலக பொருளாதார சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. பல நாடுகள் தற்போதைய சூழ்நிலையை கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களும் அவசர முடிவுகளை எடுக்காமல், நிலைமை தெளிவாகும் வரை காத்திருக்கின்றனர்.

வர்த்தக பதற்றம்

மொத்தத்தில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் நீடித்தால் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அதே நேரத்தில் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் இயல்பாக செயல்படத் தொடங்கினால், சந்தையில் நிலைமை சீராகும் வாய்ப்பும் உள்ளது. வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் செல்லும் என்பதே உலக சந்தைகளின் அடுத்த கட்ட நிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+