எப்படி நடந்தது?.. "பனிக்குடம்" உடையாமல்.. பிறந்த இரட்டை குழந்தைகள்.. ஆச்சரியத்தில் உலக மக்கள்

பனிக்குடம் உடையாமல் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

மேட்ரிட்: இளம்பெண்ணுக்கு பனிக்குடம் உடையாமலேயே, குழந்தை பிறந்துள்ள உலக அதிசயம் நடந்துள்ளது..!
பிரசவத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கும்.. இரட்டை குழந்தை, 3 குழந்தைகள், ஏன் 4 குழந்தைகள் கூட பிறந்திருக்கின்றன.

ஆனால் நாளுக்கு நாள் பெருகும் விஞ்ஞான வளர்ச்சி, மலைக்க வைத்து வருகிறது.. அந்த வகையில், ஸ்பெயின் நாட்டில் நடந்த சம்பவம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

 பனிக்குடம்

பனிக்குடம்

பனிக்குடம்... கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இதில்தான் கரு வளரும்.. கரு ஆரம்பித்து முழுமையாக வளரும் இடம் இந்த பனிக்குடத்தில்தான். கர்ப்பிணி வயிற்றில் கருப்பையில் உறை போன்ற இடத்தை பனிக்குடம் என்பார்கள்.. இந்த இடத்தில்தான் காணப்படும் நீரை அம்நியோட்டிக் திரவம் அதாவது பனிக்குட நீர் என்பார்கள்...

வெப்பநிலை

வெப்பநிலை

இந்த நீர் பல வகைகளில் குழந்தைக்கு உதவுகிறது.. சரியான வெப்பநிலையில் குழந்தையை வைத்திருக்கவும் செய்கிறது.. குழந்தை இந்த நீரில் மெல்ல மெல்ல நன்கு வளர்ச்சி பெற்றபிறகு,. அதாவது கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாத கால கட்டத்தில் உடையக்கூடும்.. அந்த பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறியபிறகுதான் கரு வெளிப்படும்.. பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறிவிட்டாலே குழந்தை பிறக்க போகிறது என்பது அறிகுறி.. இதுதான் இயற்கை..

 ஸ்பெயின்

ஸ்பெயின்

ஆனால், இயற்கைக்கு முரணான ஒரு விஷயம் ஸ்பெயின் நாட்டில் நடந்துள்ளது.. அங்கு ஒரு பெண்ணுக்கு பனிக்குடம் உடையாமல் குழந்தை பிறந்துள்ளதாம்.. அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாம். பிரசவம் என்றாலே மறுபிறவி என்று சொல்லும்போது, இப்படி ஒரு ரிஸ்க்கை எடுத்து, இந்த தாய்க்கு மறுபிறவியை தந்துள்ளனர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டாக்டர்கள்..

 ஆபரேஷன்

ஆபரேஷன்

ஆபரேஷன் செய்துதான், தாயின் வயிற்றில் இருந்து இரட்டை பெண் குழந்தைகளை அதுவும் பனிக்குடம் உடையாமல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்... 80,000 குழந்தைகளில் ஒன்றுதான் பனிக்குடத்துடன் பிறக்குமாம்.. அந்த இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் பிரசவம் பார்த்த டாக்டர்களின் போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+