தற்கொலைப் படை தாக்குதல்... ஈராக்கில் 18 பேர் பலி.. 26 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கர்பலா நகரம். இங்குள்ள அய்ன்-அல்-தைமூர் என்ற பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அப்போது, திடீரென 5 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் ஒன்று கூட்டத்தில் நுழைந்து, அங்கிருந்த மக்கள் மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளது. மேலும், கையில் வைத்திருந்த துப்பாக்கிளால் அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்னர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications