"நம்முடன் தொடர்பு கொள்ள முயலும் ஏலியன்கள்”- ஆராய்ச்சியாளர்கள் ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வேற்றுகிரக வாசிகள் உலகில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள முயல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்பியலாளர்கள் உலகில் மிகவும் மதிப்பு மிக்க விஞ்ஞானிகள் என பலதரபட்ட நிபுணர்கள் தங்கள் வாழ்நாளில் எப்படியாவது வேற்று கிரகவாசிகளை கண்டு பிடித்து விட வேண்டும் என்ற லட்சியத்தில் தான் உள்ளனர்.

வேற்று கிரக வாசிகள் வாசிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் எஸ்ஈஐடி இன்ஸ்டியூட் விஞ்ஞானி டாக்டர் நதாலி கேப்ரோல் பிரபஞ்சத்தில் மேம்பட்ட நாகரீகங்களை உடைய கிரகத்தில் உள்ளவர்கள் பூமியில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக கூறி உள்ளார்.

பழமையான நாகரீகம்:

பழமையான நாகரீகம்:

இதுகுறித்து அவர், "வேற்று கிரக வாசிகளின் சிக்னல்களை பெற எதிர்காலத்திய நவீன தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லை. அவ்வாறு வேற்று கிரகத்தில் ஒரு நாகரீகம் இருந்தால் அது வெறும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகவே இருக்கும்.

பூமியின் மேற்பரப்பு:

பூமியின் மேற்பரப்பு:

அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள எத்தகைய தொழில் நுட்பங்களை அல்லது செயல்முறை வகைகளை பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு எப்படி தெரியும் .பூமியின் மேற்பரப்பில் நாம் சாதாரணமாக இருக்கிறோம். நாம் நமது பிரபஞ்சத்தின் சொந்த நிலைப்பாடில் இருக்கிறோம்.

சூரிய குடும்பத்திற்கு வெளியே:

சூரிய குடும்பத்திற்கு வெளியே:

விஞ்ஞானிகள் இந்த ஆண்டு இயற்கை நிகழ்வுகளின் விவரிக்க முடியாத ரேடியோ சிக்னல்களை பதிவு செய்துள்ளனர் இத்தகைய சிக்னல்கள் விரைவு ரேடியோ வெடிப்புகள் என அழைக்கப்படுகிறது. இது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வருகிறது.

ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமி:

ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமி:

இவை அனைத்தும் 187.5 எண்ணின் பெருக்கமாக இருந்தன.இந்த அற்புதமான வெளிப்பாடுகள் 5 வட்டார வெடிப்புகளில் இருந்து வருகின்றன் என சுட்டி காட்டப்படுகின்றன.அனைத்தும் தொடர்ந்து லட்சக் கணக்கான் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து பூமிக்கு வருகின்றன.

இத்தகைய சிக்னல்கள் அறியப்படாத நட்சத்திரங்கள் மற்றும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

ரோவரை அனுப்ப திட்டம்:

ரோவரை அனுப்ப திட்டம்:

நாசா தலைமை விஞ்ஞானி எலென் ஸ்டோபான் கூறும் போது நாம் இன்னும் 20-30 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கை ஆதாரங்களை கண்டறிய முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாசா செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய 2020 ஆண்டு ரோவரை அனுப்ப திட்டமிட்டு உள்ளது 2030 ஆண் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+