பாகிஸ்தான் கராச்சி ராணுவ அகாடமியில் தீவிரவாதிகள் தாக்குதல்
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகேயுள்ள ராணுவ அகாடமி மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து 28 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரமே ஆன நிலையில் அடுத்ததாக இத்தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் இரவு நுழைந்த 10 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படைவீரர்களின் பதில் தாக்குதலில் 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து 28 பேர் உயிரிழந்த நிலையில் ஏர்போர்ட்டை ஒட்டிய விமானப்படை பாதுகாப்பு அகாடமியில் இன்று மதியம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 10 தீவிரவாதிகள் இங்கு ஊருடுவி துப்பாக்கிச்சூடு நடத்திவருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இதையடுத்து கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தாக்குதல்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே கராச்சி விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications