ஆப்கான்: ஹெராட் மாகாணத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கோ எஜிகேசனுக்கு தடை- தாலிபான்கள் உத்தரவு
காபூல்: ஆப்கான் ஹெராட் மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 'கோ எஜிகேசனுக்கு( ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படித்தல்) தாலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர். இதனால் ஆப்கானில் பெண்கள், குழந்தைகளின் நிலை இனி எப்படி இருக்கும்? என்ற கவலை உலக நாடுகளிடையே எழுந்து விட்டது.
''ஆனால் எங்கள் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஷரியத் சட்டத்தின்படி பெண்களின் உரிமைகள் பேணப்படும்'' என்று தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

கோ எஜிகேசனுக்கு தடை
அதே வேளையில் தாலிபான்களுக்கு பயந்து பெண்கள் தொடர்ந்து ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஹெராட் மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் 'கோ எஜிகேசனுக்கு( ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படித்தல்) தாலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

முதல் பத்வா
பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலிபான் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கமா பிரஸ் செய்தி நிறுவனம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் விரைவாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் முதன்முறையாக வெளியிட்ட 'ஃபத்வா' இதுவாகும்.

ஆண்கள் கற்பிக்க முடியாது
தாலிபான் பிரதிநிதியும் உயர் கல்வித் தலைவருமானமுல்லா ஃபரித் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் மூன்று மணி நேரம் நடத்திய ஆலோசனையில் வேறு வழியில்லை கோ எஜிகேசன்(இணை கல்வி) முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். நல்லொழுக்கமுள்ள பெண் விரிவுரையாளர்கள் பெண் மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் ஆண்களுக்கு அல்ல என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தீமைகளுக்கு வேர்
கோ எஜிகேசன் என்பது முதாயத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்கும் வேர் என்றும் முல்லா ஃபரித் கூறியதாக தெரிகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் (கோ எஜிகேசன்)இணை கல்வி மற்றும் பாலின அடிப்படையிலான தனி வகுப்புகளின் கலப்பு முறையை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி ஹெராட் மாகாணத்தில் தனியார் , அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 40,000 மாணவர்களும் 2,000 விரிவுரையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications