ஆப்கன் இந்திய தூதரகத்திலுள்ள ஆவணங்கள், கார்களை திருடிய தாலிபான்கள்!
காபூல்: தலிபான் பயங்கரவாதிகள் கந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களை சூறையாடி விட்டு கார்களை திருடிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து ஆப்கானிஸ்தானில் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டின் தூதரகங்களை மூடி விட்டன. மேலும் தங்கள் மக்களை அங்கு இருந்து மீட்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியர்கள் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவுக்கான தூதரகம் இயங்கி வந்தது. கந்தஹார் மற்றும் ஹெராட்டில் இந்திய துணைத் தூதரகங்கள் இயங்கி வந்தன. தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய உடனேயே ஆப்கானில் இருக்கும் தூதரக ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்களை இந்தியா மீட்க தொடங்கி விட்டது. இதனால் இந்திய தூதரகம், துணைத் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.

கார்களை திருடினார்கள்
இந்த நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் கந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களை சூறையாடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த தலிபான்கள் அங்கு இருந்த அலமாரிகளில் முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா என்று தேடியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இரண்டு துணைத் தூதரகங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை தாலிபான்கள் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

தாலிபான்கள் விருப்பம்
''நாங்கள் இதை எதிர்பார்த்தோம். அவர்கள்(தாலிபான்கள்) ஆவணங்களைச் சோதனையிட்டனர். இரு தூதரகங்களில் இருந்தும் வாகனங்களையும் எடுத்துச் சென்றனர்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே காபூல் தூதரகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டாம் என்றும் இந்தியா ஆப்கானிஸ்தானில் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாலிபான்கள் விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக்கு உத்தரவாதம்
மூத்த தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் இந்திய தூதரக ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை அதிகாரபூர்வமான கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications