பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அதிகாரிகள் மூலம் 3000 லிட்டர் மதுபானம் கைப்பற்றிய சம்பவம் டிரெண்டாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. 90களில் இருந்தது போல மிக கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை.
இருப்பினும் பெண்களுக்கும், பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமில் ஹராமாக கருதப்படும் விஷயங்களுக்கு தாலிபான்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

மதுபானம்
அந்த வகையில்தான் சமீபத்தில் ஆப்பாகனிஸ்தானில் தாலிபான்கள் அங்கு மதுப்பானை குடோன் ஒன்றில் இருந்து 3000 லிட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தாலிபான் அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறை காபூலில் திடீரென சோதனை மேற்கொண்டது. பல்வேறு இடங்களில் மதுபானம் பதுக்கி இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தாலிபான் மதுபானம்
இந்த சோதனையின் முடிவில் அங்கு கிடங்கு ஒன்றில் 3000 லிட்டர் மதுபானம் பேரலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதுபானத்தை கைப்பற்றிய தாலிபான் அரசு நிர்வாகிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் இருந்த ஆறு ஒன்றுக்கு எடுத்து சென்றனர். இந்த மதுபான ஆலையை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

3000 லிட்டர் மதுபானம்
3000 லிட்டர் மதுபானத்தை கைப்பற்றிய தாலிபான்கள் அதை அப்படியே ஆற்றில் ஊற்றி காலி செய்தனர். எல்லா பேரல்களையும் மொத்தமாக ஆற்றில் திறந்துவிட்டு அதை காலி செய்தனர். இதை அங்கு சுற்றி இருந்த மக்கள் பலர் உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றனர். இந்த முடிவிற்கு அங்கு இருந்த மக்கள் பலர் கைதட்டி ஆதரவு அளித்தனர்.

ஆப்கானிஸ்தான்
கடந்த முறை அமெரிக்க கண்காணிப்பில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடந்தே போதே அங்கு மதுபானங்களுக்கு தடை இருந்தது. ஆனால் அப்போது ஆங்காங்கே மறைமுகமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. தாலிபான் ஆட்சியிலும் மதுபானங்களுக்கு தடை உள்ளது. ஆனால் இந்தமுறை கள்ளச்சாராயம் காய்ச்சாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டு, சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications