6 "தலை"கள்".. இவங்கதான் எல்லாத்துக்கும் காரணமாம்.. தாலிபான்களின் சக்திவாய்ந்த அந்த நபர்கள் யார்?
6 முக்கிய தாலிபன் தலைவர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது
காபூல்: தாலிபன்களின் இன்றைய வெற்றிக்கு மிக முக்கியமான தலைவர்கள் 6 பேர் உள்ளனர்.. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களும்கூட.. இவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே, இன்றைய வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகி உள்ளது.. யார் அந்த 6 பேர்?
Recommended Video
20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், தற்போது 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர்..
ஆப்கானிஸ்தான் முழுவதையுமே தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.. அதிபர் அஷ்ரப் கானி ராஜினாமா செய்துவிட்டு.. நாட்டை விட்டும் போய்விட்டார்.. இனி வருங்காலம் என்னாகுமோ என்று அந்த நாட்டு மக்கள், தாலிபான்களை நினைத்து பயந்து அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

பொதுமன்னிப்பு
அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபன்கள் அறிவித்த போதும் யாரும் அதை நம்பவில்லை.. பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தபோதும், அதை தாலிபன்கள் நம்பவில்லை.. பெண்களுக்கு அரசாங்கத்தில் பணி என்று அழைப்பு விடுத்தும் அதையும் யாரும் நம்பவில்லை.. ஒருவித பதற்றம் மக்களிடம் தொற்றி கொண்டுள்ளது.

வெற்றி
அந்த அளவுக்கு தாலிபன்களின் ஆதிக்கம் என்பது உலக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.. இந்த வெற்றி அவர்களுக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை.. இதற்கான அர்ப்பணிப்புகள் அதிகம்.. அந்தவகையில், மிக முக்கியமான தலைவர்களாக 6 பேர் கருதப்படுகிறார்கள்.. இவர்கள்தான் தற்போதைய சக்திவாய்ந்த அந்த நாட்டின் தலைவர்களும்.

அமெரிக்கா
இந்த தலிபான் அமைப்பை நிறுவியவர் பெயர் முல்லா முகமது உமர்.. இவர்தான் தலைவராகவும் இருந்திருக்கிறார்.. இவரின் தலைமையில்தான் 1996ல் முதல்முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது... இதுக்கு பிறகு, 2001ல் அமெரிக்க ஆதரவு உள்ளூர் படைகளால் தலிபான்கள் விரட்டப்பட்டதால், முல்லா முகமது உமர் தலைமறைவாகிவிட்டாராம்.. அப்படியே 2013-ல் உயிரிழந்தும் விட்டார். இதற்கு பிறகுதான் அந்த 6 பேரும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

விவகாரங்கள்
முதல் நபர் ஹைபதுல்லா அகின்சடா.. இவர்தான் இப்போதைக்கு தாலிபன் அமைப்பின் தலைவராக இருப்பவர்.. இவர்தான், எந்தவித விவகாரங்களானாலும் சரி, அரசியல், மதம் எதுவானாலும் சரி, இவர்தான் முக்கிய முடிவை எடுப்பார்.. இவரை விசுவாசத்தின் தலைவர் என்றே அழைக்கிறார்கள்... இவர் ஒரு ஆசிரியரும்கூட.. தலிபான் ஆதரவாளர்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் குறித்து பாடம் நடத்தியவர்.. இப்போது 60 வயதாகிறது.. ஆனால், இவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.. அந்த அளவுக்கு தலைமறைவாக உள்ளார்.

தலைவர்
அடுத்ததாக, முல்லா முகமது யாகூப்.. இவர்தான் முதல் தலைவர் முல்லா உமரின் மகன்.. ராணுவ நடவடிக்கை மொத்தமும் இவர் கன்ட்ரோல்தான்.. ஆப்கானிஸ்தானில்தான் வசிக்கிறார்.. இவருக்கு 30 வயசுதான் ஆகிறது.. அதனால்தான், ஏற்கனவே ஒருமுறை இவரை தலைவராக தேர்ந்தெடுக்க முயன்றபோது, அனுபவம் இல்லை என்று காரணம் சொல்லி தேர்ந்தெடுக்கப்படவில்லை...

தாலிபன் அமைப்பு
அடுத்ததாக, சிராஜுதீன் ஹக்கானி.. இவர் அப்பா பெயர் ஜலாலுதீன் ஹக்கானி.. ஆரம்பத்தில் போர்ப்படை தளபதியாக இருந்தவர்.. இப்போது தாலிபன் அமைப்பின் கிளை பிரிவான ஹக்கானி என்ற நெட்வொர்க் இவர் கன்ட்ரோலில்தான் உள்ளது... இந்த ஹக்கானி நெட்வொர்க் என்பது, பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் தாலிபன்களின் நிதி மற்றும் ராணுவ சொத்துக்களை மேற்பார்வையிடுவதற்காகவும், ஒழுங்கமைக்கப்படுவதற்காவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுவாகும்.... இந்த குழுவினர்தான், ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஆவர்.

அலுவலக பணி
அடுத்ததாக முல்லா அப்துல் கனி பாரதர்.. தாலிபன் அமைப்பை நிறுவிய இணை நிறுவனர்களில் இவரும் ஒருவர்.. தலிபான்களின் அரசியல் அலுவலக பணிகளை இவர்தான் கவனித்து வருகிறார்.. அதுமட்டுமில்லை.. அநேகமாக இவர்தான் அடுத்த ஆப்கானிஸ்தான் அதிபர் என்றும் ஒரு பேச்சு பரவலாக உள்ளது.. முன்னாள் தலைவர் முல்லா உமரின் விசுவாசுத்துக்குரியவர்.. நம்பிக்கைக்குரியவர்.. 2010-ல் கராச்சியில் இவரை சிறைபிடித்து விட்டனர்.. கடைசியில் 8 வருஷம் கழித்துதான் விடுவித்தனர்.

பேச்சுவார்த்தை
அடுத்ததாக, ஷேர்முகமது அப்பாஸ் ஸ்டேனிக்ஜாய்.. 1996-ல் இருந்தே துணை அமைச்சராக இருப்பவர்.. தோஹா அரசியல் அலுவலகத்தின் தலைவர்.. ஆப்கானிஸ்தான் அரசு நடத்தும் நிறைய பேச்சுவார்த்தைகளில் இவர்தான் முக்கியமாக பங்கேற்பார்.

தலைவர்
அடுத்ததாக, அப்துல் ஹக்கீம் ஹக்கானி.. இவர்தான் இப்போதைக்கு ஹீரோ.. தாலிபன் அமைப்பின் பேச்சுவார்த்தை குழு தலைவர் இவர்தான்.. தாலிபனின் முக்கியமானதாக கருதப்படும் மத அறிஞர்களின் கவுன்சிலுக்கும் இவர்தான் தலைமை தாங்குவார்.. தலிபான்களின் தற்போதைய தலைவரான அகுன்சாடாவுக்கு நெருக்கமானவர்.. விசுவாசத்துக்குரியவரும்கூட..!

ஆட்சி
ஆக, இந்த 6 பேரும் சேர்ந்துதான் இனி ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க போகிறார்கள் போலும்.. என்னவிதமான கட்டமைப்பில் அந்த அரசு அமைய போகிறதென்று இதுவரை தெரியவில்லை.. ஆனால், இந்த 6 பேரின் பெயர்களும் தற்போது உலகத்துக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications