"சுப்ரீம் லீடர்".. முதன்முறையாக மக்கள் முன் தோன்றினார் தாலிபன்களின் தலைவர்.. 10 நிமிட வீடியோ
தாலிபன்களின் சுப்ரீம் தலைவர் மக்கள் முன்பு தோன்றினார்
காபூல்: தாலிபான்களின் சுப்ரீம் தலைவர் ஹெபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், முதன்முறையாக தன்னுடைய ஆதரவாளர் முன்பு தோன்றி அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.. இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்துக்கு கெடு வைத்து, அவர்களை விரட்டிவிட்ட பிறகு, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.. இதையடுத்து யார் அங்கு தலைவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது..
அப்போதுதான், தாலிபன்களின் தலைவராக முல்லா ஹெபத்துல்லா அஹுன்ஸாடா என்பவரை புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

சுப்ரீம் தலைவர்
இதுகுறித்து, தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி என்பவர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசானது, மக்களுக்கு நிச்சயம் ஒரு முன்மாதிரியாக விளங்கும்.. அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹெபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.. அவர்தான் புது அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார்.." என்றார்.

மத தலைவர்
அப்போது முதலே யார் இந்த ஹெபதுல்லா என்ற கேள்வியும் ஆர்வமும் எழுந்தது.. 1990ம் ஆண்டு முதலே தாலிபான் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர்தான் ஹெபதுல்லா.. மதம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வந்துள்ளார்.. 1995ல் தாலிபான்கள் ஃபரா மாகாணத்தை கைப்பற்றியதுமே, அங்கு ஷர்யா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் பொறுப்பு ஹெபதுல்லாவுக்குதான் அப்போது வழங்கப்பட்டிருக்கிறது..

பதவிகள்
2016 ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.. அப்போது முதலே மிக முக்கிய பதவிகளையும் வகித்து வந்தவர். இப்போது ஹெபதுல்லா சுப்ரீம் தலைவராக நியமிக்கப்படுவார் என்றால், இவருக்கு கீழேதான் அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவாராம்... ஆனால், ஹெபதுல்லா பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது.. ஒரேஒருமுறைதான் இவர் போட்டோவை தாலிபான்கள் வெளியிட்டிருந்தனர்..

ஆப்கானிஸ்தான்
அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும்கூட, ஹெபதுல்லா போட்டோவை அவர்கள் வெளியிடாமல் இருந்தனர். ஆனால், முதல் முறையாக இப்போது மக்கள் முன்பு தோன்றினார் ஹெபதுல்லா.. ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.. எனவே, இவர் இறந்துவிட்டார் என்றும் யாரோ கடத்தி கொண்டு போய் கொலை செய்துவிட்டார்கள் என்றும் செய்திகள் பரபரப்பாக வெளியே வந்தன.
Recommended Video

கொல்லப்பட்டாரா?
ஆனால், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான செய்தியும் வரவே இல்லை.. அதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்ற குழப்பம் நீடித்து கொண்டே இருந்த சூழலில்தான், திடீரென மக்கள் முன் முதல்முறையாக தோன்றினார் ஹெபதுல்லா.. ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றுள்ளார்.. ஆனால் எந்த விஷயத்தை பற்றியும் பேசாமல், முழுக்க முழுக்க மதம் தொடர்பாக மட்டும் ஹெபதுல்லா பேசினாராம்..

வதந்திகளுக்கு முற்ளுப்புள்ளி
இந்த தகவலை தலிபான் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்... அங்குதான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.. 10 நிமிட விடியோ தலிபான்களின் சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்யப்பட்டது.. இதைதவிர, ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் சுப்ரீம் தலைவர் ஹெபதுல்லா பேசியுள்ளார்.. இதைவிட இன்னொருஹைலட் உள்ளது, 1990-ல் குற்றவாளிகளை பொது இடத்தில் கொல்வது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதித்தது போன்ற மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தியவரே இந்த ஹெபதுல்லா தானாம்!












Click it and Unblock the Notifications