ரஷ்யா, சீனாவிற்கு ஸ்பெஷல் அழைப்பு.. தாலிபான் பதவி ஏற்பில் ஒன்று கூடும் வல்லரசுகள்.. இந்தியாவிற்கு நோ

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பதவி ஏற்பு விழாவிற்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்பே முடிந்துவிட்டன என்றும் தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    India-க்கு எதிராக Pakistan-ஐ தூண்டிவிட China சதி செய்கிறது - Nicki Haley பரபரப்பு குற்றச்சாட்டு

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அங்கு தாலிபான்கள் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. தாலிபான்கள் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆலோசனையில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு இறுதி முடிவு எடுக்கப்படாத காரணத்தால் ஆட்சி அமையவில்லை. பிரதமரையும் சில முக்கிய அமைச்சர்களையும் தேர்வு செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

    அமைச்சர்

    அமைச்சர்

    ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டப்படியே தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அங்கு நாட்டின் சுப்ரீம் லீடராக ஹிபாதுல்லா அகுண்ட்சாடா பதவி ஏற்க இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு கீழ் 11 முதல் 72 கவுன்சில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தேர்வு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை.

    குழப்பம்

    குழப்பம்

    ஆனால் பிரதமரை தேர்வு செய்வதில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அப்துல் காணி பராதர் அல்லது முல்லா பராதர் அல்லது முல்லா யாகூப் ஆகியோரில் ஒருவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முல்லா அப்துல் காணி பராதருக்கே அங்கு பிரதமர் பதவி வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இன்னும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் அங்கு பதவி ஏற்பு தள்ளிப்போய் உள்ளது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இந்த நிலையில் தாலிபான்களின் பதவி ஏற்பு விழாவில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கண்டிப்பாக கலந்து கொள்ள இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் ஏற்கனவே ரகசிய அழைப்புகள் சென்றுவிட்டது. அதிகாரபூர்வ அழைப்பு விரைவில் செல்லும். பதவி ஏற்பு விழா பெரும்பாலும் கந்தகாரில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றதை ரஷ்யாதான் முதலில் ஆதரித்தது, அதன்பின் சீனாவும் இந்த புதிய அரசை அங்கீகரித்தது.

    அங்கீகாரம்

    அங்கீகாரம்

    இந்த நிலையில்தான் ரஷ்யா, சீனாவிற்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்கள். சர்வதேச அளவில் அதிக ராணுவ மற்றும் பொருளாதார பலம் கொண்ட வல்லரசுகள். இரண்டும் தாலிபான்களின் பதவி ஏற்பிற்கு செல்வது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தாலிபான்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

    அழைப்பு

    அழைப்பு

    அதேபோல் இந்த பதவி ஏற்பு விழாவிற்கு பாகிஸ்தானும் வர உள்ளது. இதுவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றி ஒரு வகையில் பாகிஸ்தானின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆசிய அளவில் பாகிஸ்தானின் பலம் இதனால் ஒரு வகையில் அதிகரித்துள்ளது. இப்போது அங்கு பதவி ஏற்கும் தாலிபான் அரசில் கூட பாகிஸ்தான் ஆதரவு தலைவர்களுக்கே அதிக ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் இருப்பு இங்கு கவனம் பெறும்.

    வேறு நாடுகள்

    வேறு நாடுகள்

    இது போக ஈரான், ஈராக், கத்தார் போன்ற நாடுகளும் இந்த விழாவிற்கு வர உள்ளது. கடந்த 1996 தாலிபான் ஆட்சியில் ஈரான் தாலிபான் இடையே கடும் மோதல் நிலவியது. ஆனால் தற்போது அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் இரண்டு நாடுகளும் நட்பாகி உள்ளது. இதனால் ஈரான் இந்த விழாவிற்கு கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அரசியலில், ஷியா - சன்னி மோதலில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த பதவி ஏற்பு விழா வல்லரசுகள் கூடும் முக்கியமான விழாவாக பார்க்கப்படுகிறது.

    இந்தியா

    இந்தியா

    ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தாலிபான் அழைப்பு செல்லவில்லை. இந்தியா இதுவரை தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை. தாலிபான்களுக்கும் இந்தியாவிற்கும் இதுவரை பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதிகாரபூர்வமாக நடந்த டோஹா பேச்சுவார்த்தையும் கூட வெற்றிபெறவில்லை. இதில் பெரிய முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் இந்தியாவிற்கு இதுவரை அழைப்பு செல்லவில்லை. அமெரிக்காவிற்கும் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+