பொதுமன்னிப்பு கொடுத்துவிட்டோம்... அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம்... கூவி அழைக்கும் தாலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால் அனைவரும் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் (தாலிபான்கள், தாலிபன்கள்) அறிவித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய யுத்தங்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட்டனர் தாலிபான்கள். தாலிபான்கள் இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றக் கூடியவர்கள்.
தாலிபான்கள் கடந்த கால ஆட்சியில் மிக கடுமையான ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமான உடன் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து அந்த நாட்டை விட்டு தப்ப முயற்சிக்கின்றனர்.

இந்திய தூதரகம் மூடல்
உலக நாடுகள் பெரும்பாலும் தங்களது தூதரகங்களை ஆப்கானிஸ்தானில் மூடிவிட்டன. இந்திய தூதரகமும் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக நாடு திரும்பிவிட்டனர். ஆனால் ஆப்கான் பொதுமக்கள் நிலைமைதான் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

காபூல் துயரம்
ஆப்கான் மக்களுக்கு இருக்கும் ஒரே வெளியேறும் பாதை என்பது விமான நிலையம்தான். அந்த விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குவிந்திருக்கின்றனர். ஆனால் காபூல் விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது உலக நாடுகளின் ராணுவ விமானங்கள் மட்டுமே மீட்பு பணிக்காக காபூலில் தரை இறங்குகின்றன.
Recommended Video

இடம்பிடிக்க போராட்டம்
இந்த விமானங்களில் எப்படியாவது இடம்பிடித்து ஏறி ஆப்கானை விட்டு தப்பித்தால் போதும் என அந்த தேசத்து மக்கள் படும்பாடு பெரும் துயரைத்தருகின்றன. காபூல் விமான நிலைய வீடியோ காட்சிகள், அந்த அப்பாவிகளின் அவலத்தை மட்டுமல்ல உலகின் மனசாட்சிகளையும் உலுக்கி எடுத்து வருகின்றன.

அரசு ஊழியருக்கு பொதுமன்னிப்பு
இந்நிலையில் ஆப்கானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுத்துவிட்டோம்; அவர்கள் அச்சமின்றி பணிக்கு திரும்பலாம் என அழைப்பு விடுத்துள்ளனர் தாலிபான்கள். தாலிபான்கள் புதிய அரசு எப்படி அமையும்? எப்போது அமையும்? என்பது தெரியாத நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பேரச்சத்தில் உறைந்து கிடக்கிறது அந்த தேசம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications