அடங்கிய பதற்றம்.. 25 நாட்களுக்குப் பின்.. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் டோர்காம் எல்லை மீண்டும் திறப்பு
இஸ்லாமாபாத்: ராணுவ சோதனைச் சாவடி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையிலும் கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், இப்பிரச்சனை தொர்பாக இரு தரப்பு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களுக்குப் பிறகு டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது டோர்காம் வழித்தடம். இந்த இரு நாடுகளையும் மக்கள் கடப்பதற்கான மிக முக்கியமான வழித்தடமாக டோர்காம் உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வழியை தினந்தோறும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் இது முக்கிய வர்த்தகப் பகுதியாகவும் உள்ளது.

டோர்காம் வழித்தடத்தில் கிட்டத்தட்ட நாள்தோறும் 25 கோடி ரூபாய்க்கும் மேலாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் முக்கிய வழித்தடப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைக்க முயற்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தங்களுடைய நாட்டின் பகுதியை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, டோர்காம் எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் மூட உத்தரவிட்டது. இதநால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானம் ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தால் இரு நாடுகளின் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் டோர்காம் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 25 நாட்களுக்குப் பின்னர் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முக்கிய வர்த்தகப் பகுதியான டோர்காம் எல்லை மற்றும் இரு நாடுகளின் முக்கிய வழித்தடப் பகுதி திறக்கப்பட்டுள்ளதால் இரு நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications