இனி வெளியே எட்டிக்கூட பார்க்க முடியாது! மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டு சிறை
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீதான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்
இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு புனேவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

மூளையாகச் செயல்பட்டவர்
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் ஜமாத்-உத்-தாவா (ஜூடி) அமைப்பின் தலைவர் தலைவர் ஹபீஸ் சயீத். அதேபோல மற்றொரு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பையும் தோற்றுவித்தவர்களில் இவர் ஒருவர் ஆவர். கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில் தற்போது 15 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். இந்நிலையில், அவர் மீதான வேறு இரு வழக்குகளிலும் பாக். நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது.

31 ஆண்டுகள்
இரு வேறு வழக்குகளில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இரண்டு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேபோல ஹபீஸ் சயீதுக்கு இந்திய மதிப்பில் ₹ 3,40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சொத்துகள் பறிமுதல்
ஹபீஸ் சயீதின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 70 வயதான ஹபீஸ் சயீத், கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகப் பல வழக்குகளில் தண்டனை பெற்றவர். மேலும், ஹபீஸ் சயீத் ஐநா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் ஆவர்.

யார் இந்த ஹபீஸ் சயீத்
ஹபீஸ் சயீத் கடந்த காலங்களிலும் பல வழக்குகளில் தண்டனை பெற்றவர். ஏற்கனவே, அவர் பல ஆண்டுகள் சிறையிலும், சில ஆண்டுகள் வீட்டுக் காவலிலும் இருந்துள்ளார். பல ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளியாக இருந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்வதற்கு சில நாட்கள் முன்பு முன்பு கைது செய்யப்பட்டார். லாகூரிலிருந்து குஜ்ரன்வாலாவுக்குச் செல்லும் போது பாகிஸ்தான் பஞ்சாபின் பயங்கரவாதத் தடுப்புத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2011 முதல் 8 முறை ஹபீஸ் சயீத் சிறையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications