தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் ஒரு சிறுவன் மீட்பு.. மீதமுள்ள 8 பேர்.. தொடரும் மீட்பு பணி!
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
Recommended Video

பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 5 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.
சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.
|
எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள்
மொத்தம் 90 பேர் கடலில் ஸ்கூபா டைவிங் செய்யும் மீட்பு பணியாளர்கள் இந்த பணிக்காக களமிறங்கி இருக்கிறார்கள். இதுவரை 5 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 7 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும். இவர்கள் எல்லோரும் கடந்த ஒரு வாரமாக, தண்ணீருக்கு அடியில் எப்படி ஸ்கூபா டைவிங் செய்வது என்று பயிற்சி செய்து வந்தார்கள்.

திக் திக் நிமிடங்கள்
நேற்று மீட்பு பணி தொடங்கியதில் இருந்தே மிகவும் திக், திக் என்று நிமிடங்கள் நகர்கிறது. இரவு என்பதால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீட்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சிறந்த இயக்குனராலும் கூட இப்படி ஒரு விஷயத்தை படமாக்க முடியாது, இது எல்லாவற்றையும் விட மிகவும் திரில்லான ஒன்று என்று மீட்பு பணியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
— Jasveer singh👨🏻💻 (@jasveer10) July 8, 2018 |
எப்படி நடக்கும்
மீட்பு குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில் தான் சிறுவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியை தாண்டி வர வேண்டும். இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் குறுகலான பாதை ஆகும். இதனால்தான் அவர்களை மீட்பது மிகவும் சிரமமாக உள்ளது.
|
ஆக்சிஜன்
மொத்தம் இரண்டு பணியாளர்கள் ஒரு சிறுவனை மீட்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்கப்படும். அதோடு இடையில் சில இடங்களில் ஆக்சிஜன் மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மாற்றிவிட்டு வேறு இரண்டு பணியாளர், சிறுவர்களை மீட்டு செல்வார். இப்படி பல கட்டமாக மீட்பு பணி நடக்க உள்ளது.

மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் இந்த மீட்பு பணிக்கு பிரச்சனை உண்டாக்கும் வகையில் விஷயம் ஒன்று இன்று நடக்க உள்ளது. அதன்படி இன்று அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீட்பு பணி பாதிக்கப்படலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications