விரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்!
இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்
லண்டன்: இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடந்த முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய காரணகர்த்தாவான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

தாவூத் இப்ராஹிம் துபாயில் தாய்மறைவாக வாழ்ந்து வருவதாகவும் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் பல பெரிய நிகழ்வுகளை செய்துவருகிறார் என்றும் தகவல்கள் வருகிறது. ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற குற்றங்களை நடத்தி வருகிறார்.
அதேபோல்,இந்தியாவை அழிக்கும் எண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பதாகவும் தாவூத் இப்ராகிம் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர்களை எல்லா விதத்திலும் தாவூத் இப்ராகிம் ஆதரித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் இன்றும் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டி என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் போலீசார் கைது செய்துள்ளனர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜபிர் மோட்டி பத்து வருடங்களாக பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாவூத் இப்ராகிம் மட்டுமல்ல அவனது குடும்பத்தினர் அனைவருக்குமே வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டி கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜபிர் மோட்டியிடம் லண்டன் போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் எல்லா சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றியும் பல உண்மைகள், ரகசியங்கள் வெளிவரும் என கருதப்படுகிறது. இதனால் தாவூத் விரைவில் கைதாவான் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications