21ம் நூற்றாண்டில் மிக முக்கியம்! இந்தியாவை புகழ்ந்த பைடன்! உற்றுப்பார்த்த மோடி! திரும்பும் நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு இன்று பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரை ஜோபைடன் உற்சாகமாக வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடி மேடையில் நிற்க இந்தியா பற்றி ஜோபைடன் புகழ்ந்து பேசி உலக நாடுகளை திரும்ப வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நேற்று நியூயார்க்கில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து இன்று வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.
அதன்படி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்பது அமெரிக்க அதிபர் ஜோபைடனை பிரதமர் மோடி சந்திப்பதாகும். இதற்காக இன்று பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார்.

அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் உள்ளிட்டவர்கள் கைக்குலுக்கி வரவேற்றனர். இந்த வேளையில் அங்கு இருந்தவர்கள் பாரத் மாதாகீ ஜே என கோஷமிட்டு அதிர வைத்தனர்.இதையடுத்து அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகளை ஜோபைடன், பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஜோபைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளை மாளிகை வளாகத்தில் இருநாடுகளின் உறவு பற்றி மேடையில் பேசினார்.
பிரதமர் மோடி மேடையின் அருகே நிற்க, மைக்கில் ஜோ பைடன் இந்தியா பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை கூறினார். இதனை பிரதமர் மோடி உற்று கவனித்து இருந்தார். இந்த வேளயைில் ஜோ பைடன் கூறியதாவது: அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளின் உறவு என்பது 21ம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக குவாட் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் ஆதரவுடன் பலப்படுத்தி உள்ளோம். குவாட் அமைப்பின் பலத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன.
உலகில் வறுமையை அடியோடு விரட்டுவது, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கைகோர்த்து செயல்பட்டு வருகிறோம். மேலும் உக்ரைன் -ரஷ்யா போரால் உணவு, எரிசக்தி பாதுகாப்பில் இருநாடுகளும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். மேலும் சட்டத்தின்படியான சமத்துவம், கருத்து சுதந்திரம், மத பன்முகத்தன்மை உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் நம் நாடுகளின் வரலாற்றில் சவால்களை எதிர்கொண்டு வந்திருந்தாலும் கூட அவை நிலைத்து நிற்கின்றன'' என பெருமையாக கூறினார்.


Click it and Unblock the Notifications
