செங்கடலில் அடக்கப்பட்ட ஹவுதி படை ஆதிக்கம்! "2 தட்டு தட்டி" கொடி பறக்கவிட்ட அமெரிக்கா.. தரமான சம்பவம்
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், செங்கடலில் பயணித்த சிங்கப்பூர் கப்பலை கடத்த முயன்றபோது அதை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

இந்த போரை நிறுத்தக்கோரி அரபு நாடுகள் ஐநா சபையில் தொடர்ந்து சில தீர்மானங்களை கொண்டு வந்தன. ஆரம்பத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகள் தோற்கடித்தன. ஆனால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. ஆனால், ஐநா தீர்மானங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எந்த நாடுகளுக்கும் கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவில்லை.
எனவே ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபை போல, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. ஒரு முறை இங்கு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், அதை அமல்படுத்த வேண்டும். எனவே ரஷ்யாவும், சீனாவும் கொண்டுவரும் மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானங்களை அமெரிக்கா, தனது வீட்டோ பவரை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது.
🚨 Breaking 🚨
— World Affairs (@1_World_affairs) January 1, 2024
The US 🇺🇸 Navy has destroyed Houthi boats whose crew attempted to board a container ship in the Red Sea.
pic.twitter.com/yAJcwhcWmJ
இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை தாக்கி கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தது. இதன்படி சில கப்பல்களையும் கைப்பற்றியிருந்தது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே இதை ஆக்கிரமிப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
ஹவுதி அறிவித்தபடி சில கப்பல்களை கைப்பற்றினர். அதேபோல இந்தியா நோக்கி வந்துக்கொண்டிருந்த கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், நேற்று செங்கடலில் பயணித்த சிங்கப்பூருக்கு சொந்தமான மார்ஸ்க் ஹாங்சோ எனும் சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படையினர் முறியடித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்க கடற்படையினர், ஹவுதியின் படகை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இதில் அந்த படகில் இருந்த 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த செய்தி ஹவுதி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த பதிலடித் தாக்குதல் செங்கடலில் மீண்டும் அமைதியை நிலை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications