சீனாவின் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்த அமெரிக்கா.. சீறிப்பாய்ந்த "ஸ்பை" விமானங்கள்.. வார்னிங்!
பெய்ஜிங்: சீனாவின் தென் சீன கடல் பகுதியில் தடை செய்யப்பட்டு இருக்கும் இடங்களில் அமெரிக்காவின் போர் விமானங்களும், உளவு விமானங்களும் திடீரென பறந்து சென்றுள்ளது.
Recommended Video
தென் சீன கடல் பகுதியில் கடந்த 10 மாதங்களாக சீனாவும் அமெரிக்காவும் மோதலை சந்தித்து வருகிறது. தென் சீன கடலின் 90% பகுதியை எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சீனா கூறிவிட்டது. ஆனால் அங்கு இருக்கும் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் எல்லாம் சீனாவின் இந்த ''மைனர்'' திமிரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
இதில் சீனாவிற்கு எதிராகவும் தென் சீன கடல் பிராந்தியத்தில் இருக்கும் சின்ன சின்ன நாடுகளுக்கு ஆதரவாகவும், அமெரிக்கா களமிறங்கி உள்ளது. இங்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் இருக்கிறது என்பதும் கூட அமெரிக்காவின் இந்த கரிசனத்திற்கு ஒரு வகையில் காரணம் ஆகும்.

இப்போது என்ன நடக்கிறது
சரி ஓகே, இப்போது அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தால்... சீனா தொடர்ந்து அங்கு பதற்றத்தை உண்டாக்கும் வகையில் போர் பயிற்சிகளை செய்து வருகிறது. தென் சீன கடல் பகுதியில் போர் கப்பல்களை இறக்கி உள்ளது. போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இறக்கி வித்தை காட்டி வருகிறது. அதேபோல் போர் விமானங்களும் ரோந்து பணிகளை செய்து வருகிறது. இரண்டு மாதமாக இந்த போர் பயிற்சி நடக்கிறது.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவும் இங்கு இரண்டு போர் கப்பல்களை வைத்து தீவிர ரோந்து பணிகளை செய்து வருகிறது. ரோனால்ட் ரீகன் மற்றும் நிமிட்ஸ் என்ற இரண்டு போர் கப்பல்கள் அங்கே உள்ளது. இது இரண்டும் அமெரிக்காவின் அணு ஆயுத போர் கப்பல் ஆகும். அதேபோல் அமெரிக்காவின் விமானப்படையும் இங்கு மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.

ஏவுகணை
இந்த நிலையில்தான் அங்கு சீனா இரண்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. சீனாவின் எல்லைக்குள் அமெரிக்காவின் போர் விமானங்கள், உளவு விமானங்கள் வந்ததாக பெய்ஜிங் குற்றஞ்சாட்டுகிறது. அமெரிக்காவிற்கு வார்னிங் கொடுக்கும் வகையில் சீனா இந்த ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. போர் பயிற்சி செய்கிறோம். இது அமெரிக்காவின் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. அதை வைத்து பயிற்சி எடுக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது .

அமெரிக்கா பதிலடி
DF-26B, DF-21D என்ற இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியது. தென் சீன கடல் பகுதியில் இருக்கும் பார்சல் தீவிற்கு அருகே இந்த ஏவுகணைகள் விழுந்து வெடித்தது. இந்த நிலையில் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு மீண்டும் கூடுதலாக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. அதோடு குட்டி குட்டி ஸ்பை விமானங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. டிராகன் லேடி என்று அழைக்கப்படும் யு -2 ரக உளவு விமானங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

டிராகன் லேடி
இரண்டு விமானங்கள் சீனாவின் எல்லைக்குள் சென்று படங்களை பிடித்துள்ளது. சீனாவின் தடை செய்யப்பட கடல் பகுதியில் உளவு மேற்கொள்ள இப்படி அமெரிக்கா இந்த விமானங்களை அனுப்பி உள்ளது. மிக அதிக உயரத்தில், ஏவுகணைகள் மூலம் தாக்க முடியாத, துல்லியமான ஸ்பை விமானங்கள் ஆகும் இது. சீனா போர் பயிற்சி செய்யும் போது சரியாக இந்த விமானங்கள் உள்ளே வந்துள்ளது... சீனாவிற்கு அமெரிக்காவின் இந்த செயல் பெரிய கோபத்தை உண்டாக்கி உள்ள நிலையில் சீனா இதற்கு எப்படி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்பு எழுந்துள்ளது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்!












Click it and Unblock the Notifications