For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பாடே வேணாம்... சூரியனை வெறிச்சுப் பார்த்தா போதும்.. எல்லாம் வெயிட்டைக் குறைக்கத்தான்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உடல் எடையைக் குறைப்பதற்காக உணவுக்குப் பதிலாக சூரியனை வெறித்துப் பார்க்கும் புதிய முறையைப் பின் தொடரத் தொடங்கியுள்ளனர் சீனப் பெண்கள்.

உலகளவில் மனிதர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது உடல் பருமன். காரணம் அதிக உழைப்பின்மை மற்றும் உணவுப் பழக்கவழக்கம்.இதனால் உண்டாகும் உடற்பருமன் கூடவே இதயநோய் உள்ளிட்ட பிரச்சினைகளை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்குப் போவது, டயட்டில் இருப்பது எல்லாருக்கும் சாத்தியமல்ல. எனவே தான் இதற்கு புதிய எளிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் சீனப் பெண்கள்.

நல்லா வெறிச்சுப் பார்க்கணும்...

நல்லா வெறிச்சுப் பார்க்கணும்...

அதாவது சூரியனை வெறித்துப் பார்ப்பது தான். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள சாம் கா கிராமத்தின் கடற்கரையில் இதற்கென்றே பெண்கள் கூட்டம் தினம் கூடி விடுகிறது.

சார்ஜ் ஏறும்...

சார்ஜ் ஏறும்...

இந்த முறையின் படி, சூரியனில் இருந்து சோலார் பேட்டரிபோல மனிதர்கள் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும் என இவர்கள் நம்புகிறார்கள். இவர்களைப் பொருத்தவரை, உணவு உண்பதற்கு பதிலாக, சூரிய சக்தியை பெற்றுக் கொள்வதே போதுமாம்.

உணவுக்கு இணையான கலோரி...

உணவுக்கு இணையான கலோரி...

மேலும், சூரியன் மாலையில் மறையும்போது அதை வெறித்து நின்று பார்ப்பது, நமக்கு உணவு அளிக்கும் கலோரிகளுக்கு இணையான கலோரிகளை நமது உடலுக்கு வழங்குவதாகவும், இந்த சிகிச்சை முறையினை முழுமையாக முடித்தவர்கள் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்வதற்காகவும் இப்பெண்கள் கூறுகின்றனர்.

கடவுள் வழிபாடு...

கடவுள் வழிபாடு...

இவ்வாறு சூரியனை உற்று நோக்கும் பயிற்சியை, அங்குள்ள சிலர் கடவுள் வழிபாட்டின் ஒரு அங்கமாகவும் பின்பற்றத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

சரும பாதுகாப்பு...

சரும பாதுகாப்பு...

ஆனாலும், சூரிய ஒளியால் சருமம் கருத்து விடக் கூடாது என்பதற்காக சில பெண்கள் குடை மற்றும் கைக்குட்டை சகிதம் சூரியனை வெறித்துப் பார்க்கின்றனர்.

English summary
Shortly before sunset, while many are busy preparing dinner, a small group of women meet up to nourish themselves in a very different way. A new 'health' trend in Hong Kong sees women staring straight at the sun in the belief that it will replace their need for food and even improve their vision and sleep quality, reports Oriental Daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X