இஸ்ரேல்-பாலஸ்தீன போர்.. இதுவரை கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் யார்? வெளியானது லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது போரை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இரு தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கிறார். தவிர, இதுவரை போரில் கொல்லப்பட்ட ஹமாஸின் முக்கிய தலைவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை தொடுத்தது. ஓராண்டாக நடைபெற்று வரும் போரில், கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் கொல்லப்பட்டார். ராஃபாவில் அவரது வீட்டில் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

israel hamas

ஹமாஸை அழிப்பதுதான் நோக்கம் எனில், அதன் தலைவர்தான் தற்போது கொல்லப்பட்டுவிட்டாரே, போரை நிறுத்த வேண்டியதுதானே! என பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியுள்ளனர். ஆனால், பணயக்கைதிகள் மீட்கப்படும் வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டுகளில் ஹமாஸ் அமைப்பின் 16 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கடந்த மார்ச் மாதம் ஹமாஸ் துணை ராணுவ தளபதி மர்வான் இசா, இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இவர் நேற்று முன்தினம் உயிரிழந்த சின்வாருக்கு மிகவும் நெருக்கமானவராவார். கடந்த ஜனவரியில் பெய்ரூட்டில் வைத்து சலே-அல் அரூரி என்பவரை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இவர், ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸின் நிறுவனராவார். இவரை கொல்ல ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது.

இந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் இஸ்மாயில் ஹனியே! இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவராக இருந்து வந்தார். ஹமாஸ் என்பது அரசியல் இயக்கம் என்பதால், ஹினயே இந்த அமைப்புக்கு மிக முக்கியமானவராக கருதப்பட்டார்.

மற்றொரு முக்கிய நபர், முகமது டெய்ஃப். இவர் ஹமாஸ் அமைப்பின் ராஜதந்திரியாக அறியப்படுகிறார். கடந்த 2000லிருந்து இவரை கொல்ல இஸ்ரேல் தொடர்ந்து திட்டமிட்டு வந்தது. 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று அவரை வான்வழித் தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொன்றது.

தலீப் அப்துல்லாவும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய போராளியாவார். இவர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த கட்டளை தளபதியாவார். கடந்த ஜூன் மாதம் தெற்கு லெபனானில் வைத்து இவரது கதையை இஸ்ரேல் முடித்தது.

சபாஷ்.. கை கோர்க்கும் தமிழர்கள்-கன்னடர்கள்! பெங்களூரில் முதல்முறையாக நடக்கிறது ஒற்றுமை மாநாடு!


ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான நாசர், தென்மேற்கு லெபனானிலிலிருந்து இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலை தொடுத்து வந்தார். அப்துல்லாவை கொன்ற கையோடு, நாசரையும் இஸ்ரேல், லெபனானில் வைத்தே காலி செய்தது.

இந்த கொலைக்கு பின்னர், ஜூலை 30 அன்று லெபனானின் தலைநகரின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இதில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டார். கடந்த 1982லிருந்து இவர் ஹிஸ்புல்லாவில் பயங்கர ஆக்டிவாக இருந்தார்.

ஹிஸ்புல்லாவை தாண்டி, அதன் சிறப்பு படைப்பிரிவான ரத்வான் ரெஜிமென்ட்டிலும் சில முக்கிய ஆட்களை இஸ்ரேல் கொலை செய்திருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட ஸ்பெஷல் ஆப்ரேஷனில், ரத்வான் ரெஜிமென்ட் தளபதியான அஹ்மத் மஹ்மூத் வஹ்பி செப்டம்பர் 20ம் தேதி கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் அகில், ஹிஸ்புல்லாவின் ஏவுகணை பிரிவு தலைவர் இப்ராஹிம் குபைசி, ட்ரோன் பிரிவின் தலைவராக இருந்த முகமது ஸ்ரூர், ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சிலின் துணைத் தலைவர் நபில் கௌக், ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான அலி கராக்கி, மற்றொரு தலைவர் ஃபதா ஷெரிஃப், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் வரை தொடர்ந்து இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+