உலகிலேயே விலை மதிப்பான விவாகரத்து... மனைவிக்கு ரூ 26,450 கோடி ஜீவனாம்சம் தந்த சுவிஸ் தொழிலதிபர்
பெர்ன்: முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது.
சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள்.

ஜீவனாம்சம்...
இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி எலினாவுக்கு 4,020,555,987 சுவிஸ் பிராங்க்ஸ் நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 26,450 கோடி சுமார் ஆகும்

ரெண்டு பங்களாக்கள்...
இதுபோக, அமெரிக்காவில் உள்ள டிமிட்ரிக்கு சொந்தமான ஒரு பங்களாவையும், கிரீக் தீவில் உள்ள ஒரு பங்களாவையும் மனைவி எலினாவுக்கு கொடுக்க அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

காசோலையாக...
நீதிபதி தீர்ப்பு அளித்த சில நிமிடங்களிலேயே, தொழிலதிபர் டிமிட்ரி தனது முன்னாள் மனைவிக்கு ரூ 26,450 கோடிக்குமான காசோலையை நீதிமன்ற வளாகத்திலேயே கொடுத்துவிட்டார்.

விலையுயர்ந்த விவாகரத்து...
இதுவரை இவ்வளவு அதிகமான தொகை விவாகத்து வழக்கில் ஜீவனாம்சமாக வழங்கப் படாததால் இதுவே உலகிலேயே விலையுயர்ந்த விவாகத்து என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. தற்போது விவாகரத்தான டிமிட்ரி, எலினா தம்பதிக்கு 22 வயதில் மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications