நெதன்யாகுவை காலி பண்ண.. அவருகிட்ட இருந்து இதெல்லாம் கத்துக்கணும்! இஸ்ரேல் அரசியலில் டிவிஸ்ட்!
டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே சமயம் வலுவாக உள்ள காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சி, நெதன்யாகுவை காலி செய்ய வேண்டும் எனில்.. அவருடைய பாணியை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் நெதன்யாகுவின் கட்சி 53 இடங்களை பெற்று இருக்கிறது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. அதே சமயம், எதிர்க்கட்சிகளின் கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. இதுபோக மூன்றாவதாக உள்ள அரபு கட்சிகள், 19 இடங்களை கைப்பற்றி இருக்கின்றன.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். அரபு கட்சிகளுக்கும், இதுதான் முதன்மையான பிளான். ஆனாலும், இரண்டு கட்சிகளும் இன்னும் கூட்டணி வைக்கவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகள், அரபு கட்சியுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து யோசித்து வருகின்றன. இது குறித்து பேசியிருக்கும் அந்நாட்டு அரசியல் நிபுணர்கள், யோசித்தால் வேலைக்காகாது.. நெதன்யாகுவை போல இறங்கி அடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
நெதன்யாகு எப்போதுமே தனது வலதுசாரி மற்றும் தீவிர மதவாத கூட்டணி கட்சிகளை, தனக்கு கீழ் மிக கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணி அப்படி கிடையாது. இக்கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக.. செக்கு மாடுகளைப் போல சுற்றிக்கொண்டிருக்கும். எனவே, இந்த முரண்பாடுகளை களைந்து ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் நெதன்யாகுவை வீழ்த்த முடியும்.
இப்போது எதிர்க்கட்சிகளுக்கு 19 இடங்களை கொண்டுள்ள அரபு கட்சிகளின் ஆதரவு அவசியம். தேர்தல் பிரச்சாரத்தில் என்னவோ இவர்கள் அரபு கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தான் பேசி இருந்தார்கள். ஆனால், நெதன்யாகுவை பாருங்கள்.. அவர் இதைவிட மோசமாக எல்லாம் சில கட்சிகளை திட்டி இருக்கிறார். இருந்தாலும், தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்பதற்காக.. தான் பேசியதை எல்லாம் மறந்து விட்டு, அந்த கட்சிகளுடன் கூட்டணியும் வைத்திருக்கிறார். எனவே, அதேபோல எதிர்க்கட்சிகள், அரபு கட்சிகளுடன் பேச வேண்டும். வெளியில் இருந்து ஆதரவு தாருங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டு.. ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தாலும், இடைக்கால அரசுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டாக வேண்டும். குறிப்பாக, நாடாளுமன்ற கூட்டத் கூட்டத்தொடர் தொடங்கியதும்.. தற்போதைய சபாநாயகரை உடனடியாக நீக்க வேண்டும். அதேபோல, கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் தோல்விகள் குறித்து நெதன்யாகு அரசு மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் எதிர் கட்சிகளிடம் பிளான் இருக்கிறது. ஆனால், அவர்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை.
எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கோணத்தில் பார்த்தால்.. பெரிய எதிரியான நெதன்யாகுவை ஈசியாக கவிழ்த்து விட முடியும். எனவே எதிர்க்கட்சிகளும், அரபு கட்சிகளும் இந்த விஷயத்தில் கை கோர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்! இஸ்ரேலில் என்னதான நடக்கிறது என்று!




Click it and Unblock the Notifications
