Cyclone Murasu: சென்னை கடற்கரைகள் மூடல்.. மக்களை திரும்பி அனுப்பிய போலீசார்! மோசமடையும் நிலைமை!
சென்னை: முரசு புயல் சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திராவை நெருங்கி வரும் நிலையில், சென்னை கடற்கரைகளில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே பீச்சுக்கு வரும் மக்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வங்கக் கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ள முரசு புயல், இன்று நள்ளிரவு 11:30 முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள்ளாக, ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து.. தெற்கு ஆந்திராவின நெல்லூருக்கும்-நர்சாபுரத்துக்கும் இடையிலும், ஓங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில், கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 100 முதல் 110 கிலோமீட்டர் என இருக்கும் எனவே. இப்புயலின் தாக்கத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல், மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடப்பதால்.. சென்னையில் உள்ள கடற்கரைகளில், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மக்கள் கடற்கரைக்கு வருவதை போலீசார் தடை செய்திருக்கின்றனர்.
பேரிகார்டுகளை அமைத்து, கடற்கரைக்குள் நுழையும் பாதைகளை போலீசார் மூடி இருக்கின்றனர். குறிப்பாக, சென்னை ஈசிஆர் கடற்கரையில் பேரிகார்டுகளை அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைக்கு வரும் மக்களை உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
