மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோ! தேனி சிறை கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா? அறிக்கை தர உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்ட சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா என அறிக்கை தர, நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவருமான எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆணையிட்டுள்ளார். நவம்பர் 16 ஆம் தேதி கடலூர், மதுரை, சேலம், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி துணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் கடந்த 26ஆம் தேதி இரவு காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

Theni Prison

அப்போது நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டால் அந்த வழியாக அவர்கள் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சுற்றியிருக்கும் மலை பகுதிகளில் டிரோன் மூலம் கைதிகளை தேடினர்.

தேனி சிறைக் கைதிகள் தப்பித்த சம்பவம் தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் நேரடியாக வந்து ஆய்வு நடத்தினார்.

இந்த நிலையில் காணாமல் போன நாளே 5 சிறைக் கைதிகளை போலீஸார் பிடித்தனர். இதையடுத்து மலை பகுதியில் தப்பித்த 8 பேரை டிரோன் மூலம் கண்டுபிடித்ததை அடுத்து அவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து மேலும் 4 பேரை போலீஸார் தேடியதில் 2 பேர் கிடைத்துவிட்டனர், அண்ணன் தம்பியான இருவர் சரணடைய காவல் துறைக்கு வந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 17 கைதிகளும் பிடிபட்டு மற்ற சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தப்பி போன அன்று கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் "தேனி சிறையில் எங்களை துன்புறுத்துகிறார்கள்.

தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள். சாப்பாடு சரியில்லை, புழுகள் இருக்கின்றன. எங்கள் உறவினர்கள் எங்களை பார்க்கக் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இந்த சித்ரவதைகளை எல்லாம் நீதிபதியிடம் சொல்லி சரணடையவே நாங்கள் தப்பித்து சென்றோம், மற்றபடி நாங்கள் எந்த குற்றச் செயல்களை செய்யவும் ஜெயிலில் இருந்து தப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் மீனாட்சி சுந்தரத்தின் தாயாரும், சிறையில் சித்ரவதை செய்வது குறித்தும் தப்பியோடியதற்காக மகனை காவலர்கள் மிருகத்தனமாக தாக்கியதையும் மனுவாக எழுதி முதல்வர் விஜய்க்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் அறிக்கை தர வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+