குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியாச்சா?.. ரிசல்ட் எப்போ தெரியுமா?..2 மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. 846 பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதினர். 81 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார்.

அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பணியிடங்களக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

TNPSC

846 காலி பணியிடம்

உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், துணை பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட 14 வகையான பதவிகளில் வரும் 41 குரூப் 2 பணியிடங்களுக்கும், மூத்த ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மூத்த வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 44 வகையான பதவிகளில் வரும் 780 குரூப் 2ஏ பணியிடங்களுக்கும் என மொத்தம் 846 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

குரூப் 2 தேர்வில் தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர் (நிதிப் பிரிவு) காலியிடங்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு பணிகள் துறை நன்னடத்தை அலுவலர் (காலியிடங்கள் 2) பதவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள. அதேபோல, குரூப் 2 தேர்வில், தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் மேற்பார்வையாளர் பதவி (காலியிடங்கள் 10), குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு பணிகள் துறை உதவியாளர் (காலியிடங்கள் 3) ஆகிய பதவிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஒருங்கிணைந்த குரூப்2, குரூப்2ஏ தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 821 இல் இருந்து, 846 ஆக அதிகரித்தது. அதாவது குரூப் 2 பணியில் 43 இடங்கள், குரூப் 2ஏ பணியில் 803 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளுக்கு 4 லட்சத்து 89 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 12 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

92,595 பேர் ஆப்சன்ட்

மாநிலம் முழுவதும் 1647 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், 3,97,290 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 92,595 பேர் பங்கேற்கவில்லை. சென்னையைப் பொருத்தவரை 173 மையங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தேர்வை கண்காணிக்க ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், கண்காணிப்பாளர்கள், சோதனை நடத்துபவர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படையினர் என தேர்வு பணி, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், ராயப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 173 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

200 மதிப்பெண்கள்

எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். தாமதமாக வந்தவர்கள் சிலர் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

2 மாதத்தில் ரிசல்ட்

தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவினரும் ஆய்வு செய்தனர்.

சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். தேர்வு எழுதியவர்கள், இந்த இந்த முறை தேர்வு நடுநிலையாக இருந்ததாகவும், எளிமையாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+