ஹெராயின் வைத்ததும் போலீஸ் தான்.. ரெய்டில் எடுத்ததும் போலீஸ் தான்.. CCTVயால் சிக்கலில் ஆம் ஆத்மி அரசு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சிவசேனா தலைவர் ஒருவரது வீட்டில் காவல் அதிகாரியே ஹெராயின் போதைப்பொருளை ரகசியமாகப் பதுக்கிவிட்டு, பின்னர் அதே இடத்தில் சோதனை நடத்தி போதைப்பொருளை கைப்பற்றியதாக கூறியிருக்கிறார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இப்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்கு போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சியினரை காலி செய்யவே போலீசாரை ஆம் ஆத்மி பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Punjab fake police raid

போலீஸ் செய்த செயல்

அதாவது அங்குள்ள கன்னா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசேனா தலைவர் மகந்த் காஷ்மீர் கிரி.. இவரது வீட்டில் தான் போலீசாரே ஹெராயின் போதை பொருளை வைத்து விட்டு சோதனையில் அதை எடுப்பது போல எடுத்துள்ளனர். அதாவது முதலில் சாதாரண உடையில் அங்கு சென்ற ஏஎஸ்ஐ சுக்தேவ் சிங், ஒரு ரூமிற்கு நுழைந்து மெத்தைக்கு கீழே ஏதோ ஒரு பொருளை வைக்கிறார்.

பிறகு சிறிது நேரத்துக்கு பிறகு, போலீஸ் டீம் அந்த வீட்டுக்கு வந்து சோதனை நடத்தியுள்ளது. அப்போது அதே மெத்தைக்கு கீழே சுமார் 30 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததாக கூறி போலீசார் அதை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து மகந்த் காஷ்மீர் கிரி கைது செய்யப்பட்டார். இவை அனைத்துமே அங்கிருந்த சீக்ரெட் கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது. இதுவே இப்போது போலீஸ் நடவடிக்கை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பின்னணி

மகந்தின் ஓட்டுநர் குர்ஜந்த் சிங் ஜந்தா என்பவர் 7.5 கிராம் ஹெராயினுடன் முதலில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது மகந்தின் பெயரை அவர் சொன்னதால்.. போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும், மகந்தினை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காக போலீசாரே ஹெராயினை வைத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து போதை பொருளை வைத்த சுக்தேவ் சிங்கை பணியிடை நீக்கம் செய்தார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சிவசேனா தலைவர் மகந்த் காஷ்மீர் கிரியும் விடுவிக்கப்பட்டார்.

கடும் தாக்கு

இது பஞ்சாப் அரசியலிலும் மிக பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், "ஆம் ஆத்மியின் சட்டம் - ஒழுங்கு மாடலுக்கு வரவேற்கிறோம்! போலீஸ் அதிகாரி ஒருவரே வீட்டின் மெத்தைக்கு கீழே போதைப்பொருளை வைக்கிறார். பிறகே அவர்களே சென்று கைது செய்கிறார்கள். மக்களை சிக்க வைக்க போலீசாரே போதைப்பொருளை வீட்டுக்கு கொண்டு வந்து வைப்பார்கள் என்பதை மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று விமர்சித்தார்.

விளக்கம்

இதற்கிடையே இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சரான பரிந்தர் குமார் கோயல் விளக்கமளித்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில அரசியல் கட்சிகள் பஞ்சாபின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+