கூட இருந்தே குழி பறிக்குறாங்க..ஆட்சியைக் கவிழ்க்க விசிக சதி! உள்ளே வரும் பாமக! பகீர் கிளப்பிய புள்ளி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: முதல்வர் ஜோசப் விஜய் அரசாங்கத்தை கவிழ்க்க விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே சதி செய்கின்றனர். பாமக எப்போதும் தவெக கூட்டணிக்குச் செல்ல தயாராக உள்ளது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாவளியை முன்னிட்டு குடும்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Arjun Sampath

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கவலைக்குள்ளாகியுள்ளது. செஞ்சியில் மாணவி மாயமாகி 25 நாட்களுக்கு மேல் ஆகியும் முன்னேற்றம் இல்லை. தமிழகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

அர்ஜுன் சம்பத்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆயிரம் கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ளார். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. இதில் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

மின்தடை

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை உள்ளது. துணை ஜனாதிபதி மதுரை கோவிலுக்கு வந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவிலுக்கு வந்தபோது, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், அமைச்சரவை கூட்டத்திலேயே மின்தடை. மின்துறை அமைச்சர் தொழில்நுட்ப கோளாறு என்கிறார். ஏன் இத்தனை நாள் சரி செய்யவில்லை? தீபாவளி பண்டிகைக்குள் அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்ய வேண்டும்.

ஹலால் மார்க்

சீனாவில் இருந்து வரும் பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்க வேண்டும். ISI சான்றிதழ் இருக்கும்போது புதிதாக ஹலால் மார்க் என்ற பெயரில் பிரியாணி, துணி வியாபாரம் வரை முஸ்லிம் லீக் மற்றும் மத அடிப்படைவாதிகள் துணையுடன் வர்த்தகம் நடக்கிறது. தமிழர் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் கணக்கில் சுரண்டப்படுகிறது, இந்த நிதி எங்கு போகிறது என்று தெரியவில்லை, எனவே ஹலால் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.

திமுக ஆட்சி

கோவிலுக்கு சொந்தமான இடத்திலேயே ஈ.வெ.ரா சிலைகளை நிறுவுவது, கோவிலில் மட்டும்தான் கடவுள் இல்லை என்பான், சர்ச், மசூதி முன் வைக்க மாட்டான். திமுக ஆட்சியில்தான் இதை அதிகம் செய்வார்கள். தஞ்சாவூர், கும்பகோணம் கோவில் இடத்தில் உள்ள ஈ.வெ.ரா சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு முன் உள்ள ஈ.வெ.ரா சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும். இது கலவரத்தை தூண்டும் உள்நோக்கம்.

விசிக - பாமக

முதல்வர் ஜோசப் விஜய் அரசாங்கத்தை கவிழ்க்க விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே சதி செய்கின்றனர். பாமக எப்போதும் அங்கு போக ரெடியாக உள்ளது. பாலன் இல்லத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டனர். சனாதனத்தை அழிப்போம் என்று விசிக அமைச்சர் வன்னியரசு பேசுவதை கண்டிக்கிறோம். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை மதபோதகர் மோகன் சி லாசரஸ் அறிவிப்பது தவறான முன்னுதாரணம். தவெகவை கிறிஸ்தவ மிஷனரிகள் கையில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+