சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைகள் சீற்றம்! ஆக்ரோஷமாக பொங்கும் அலைகள்! செல்பி எடுக்கும் மக்கள்!
சென்னை: சென்னையில் திருவொற்றியூர், எண்ணூர் , காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15-ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால்
சென்னை திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்படுவதால் கடற்கரைக்கு சென்ற மக்கள் அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர்.
எனினும் கடல் சீற்றத்தின் ஆபத்தை உணராமல் சிலர் செல்பி எடுத்து வருகிறார்கள். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை முதல் குமரி கடல் வரை உள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த காற்றழுத்தம் இலங்கை கடல் பகுதியை நோக்கி நகரும் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை மழை தொடரவுள்ளது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications