நெதன்யாகுவை விடுங்க! இஸ்ரேல் தேர்தலால்.. இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் புது நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் தேர்தல் முடிவில், எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அந்நாட்டில் அரசு அமைவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாமதம் மற்றும் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் ஆகியவை இந்தியாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா-இஸ்ரேல் உறவு இந்த தேர்தல் குழப்பங்களால் பாதிக்க கூடும். இது வெளிப்படையாக தெரிந்த விஷயம்! தெரியாத விஷயம் என்வெனில்.. இஸ்ரேலில் புதியதாக அமைய உள்ள அரசு அல்லது தற்போதைய பிரதமர் நெதன்யாகு, ஈரானுடன் என்ன ஏழரையை கூட்டப்போகிறார் என்பதுதான். இது இரண்டும்தான் இந்தியாவுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது.

Netanyahu

தேர்தல் முடிவுகள்

இஸ்ரேலை பொறுத்தவரை மீண்டும் நெதன்யாகு பிரதமராக வருவார் அல்லது எதிர்க்கட்சிகள் வரும். நெதன்யாகு பிரதமராக வேண்டும் எனில், அதன் பின்னால் சில கணக்குகள் இருக்கின்றன.

நெதன்யாகு மற்றும் கூட்டணி கட்சிகள் - 53
எதிர்க்கட்சி கூட்டணி - 48
அரபு கட்சிகள் - 19

நெதன்யாகுவின் கணக்கு

இதுதான் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட். மொத்த இடங்கள் 120. ஜெயிக்க வேண்டும் எனில் 61ஐ பெற வேண்டும். நெதன்யாகு பிரதமராக இன்னும் 8 சீட் தேவை. இதுக்காக எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டார். அரபு கட்சிகளிடமும் ஆதரவு கேட்டும் போக மாட்டார். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னா எப்படி? நெதன்யாகு இப்படிதான். எது நடந்தாலும் நான்தான் பிரதமர்.. எழவு வீடாக இருந்தாலும், கல்யாண வீடாக இருந்தாலும் மாலை எனக்குதான் என்று கேட்பவர்.

விபரீத விளையாட்டு

எனவே பிரதமர் பதவிக்கு வர, இவருக்கு இருக்கும் ஆப்ஷன் இன்னொரு முறை தேர்தலை நடத்துவதுவதான். அதுக்கு கொஞ்ச காலம் ஆகும். அதுவரை நெதன்யாகுதான் தற்காலிக பிரதமர். அவரிடம் ராணுவ முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஈரானுடன் ஏழரையை இழுத்தால்.. மக்கள் தன்னை மீண்டும் ஹீரோவாக பார்ப்பார்கள்! இதை வைத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நெதன்யாகு கணக்கு போடுகிறார். அவர் கணக்கில் தீயை வைத்து கொளுத்த!

ஈரானுடனான சண்டையும் இந்தியாவும்

ஈரானை வம்புக்கு இழுத்தால் அது சும்மா இருக்குமா? ஹார்முஸ் ஜலசந்தியை மொத்தமாக கண்ட்ரோலில் எடுக்கும். இப்போ நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை என்று இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை அதிகமாகியிருக்கிறது. இந்த நேரத்தில் வந்து, ஈரானுடன் இஸ்ரேல் போர் நடந்தால்.. ஈரான் பதிலடி கொடுக்கும். நிச்சயம் ஹார்முஸ் வழியாக ஒரு கப்பல் கூட போகாது. இது இந்தியாவுக்குதான் தலைவலி. ஆளும் கட்சி இன்னும் பெரிய நெருக்கடியை எதிர்க்கொள்ளும்.

ஆட்சி மாற்றம்

அதேபோல, இஸ்ரேல் அரசியல் குழப்பம் இந்தியாவுக்கு இன்னொரு கோணத்திலும் பிரச்சனையை கொடுக்கும். அதாவது இந்தியா-இஸ்ரேல் உறவு என்பது வெறும் ஆயுத கொள்முதலோடு நின்றுவிடாமல், கூட்டு தயாரிப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, விவசாயம், விண்வெளி, வர்த்தகம் என பல துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது. இந்த நேரத்தில் இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது என்றால்.. பல வருடங்களாக கட்டியமைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் கண்டுகொள்ளாமல் கைவிடப்படலாம். புதிய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதற்கு பதிலாக ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவிக்கலாம்.

இஸ்ரேலை நம்பும் இந்தியா

இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் இந்தியாவின் வான் பாதுகாப்பு, கண்காணிப்பு, ட்ரோன்கள் மற்றும் துல்லிய தாக்குதல் ஆயுதங்களுக்கு இஸ்ரேலிய தொழில்நுட்பத்தையே இந்தியா பெரிதும் நம்பி இருக்கிறது. இந்தியாவின், உள்நாட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ்.. அடுத்த கட்டமாக தொழில்நுட்ப பகிர்வு மற்றும் கூட்டு தயாரிப்பு முக்கிய இலக்காக இருக்கிறது. இந்த நேரத்தில் இஸ்ரேலில் நடக்கும் ஆட்சி மாற்றம், இந்தியாவை பாதிக்கக்கூடும் என்று ஆட்சியாளர்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+