Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் அமைதியான நாட்டில் மோசமான வெடி விபத்து! 20 பேர் பலி, பலர் படுகாயம்! புத்தாண்டு நாளில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் ஆடம்பர ரிசாட்டில் ஒன்றில் மோசமான வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மதுபான விடுதிக்குள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பொதுவாகவே உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. எந்தவொரு போருக்கும் செல்லாமல்.. பெரும்பாலான நேரங்களில் நடுநிலையான நிலைப்பாட்டிலேயே சுவிட்சர்லாந்து இருந்துள்ளது. இதன் காரணமாகவே சுவிட்சர்லாந்து உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த சுவிட்சர்லாந்து நாட்டில் ஆடம்பர ரிசாட்டில் திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Switzerland world

தீ விபத்து

அங்கு ஆடம்பரப் பனிச்சறுக்கு விடுதிகள் நிறைந்துள்ள கிரான்ஸ் மொன்டானா என்ற நகரில் தான் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் ஏற்பட்ட இந்தப் பயங்கர வெடிப்பில் சிக்கிப் பல்வேறு பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதலில் இந்த குண்டுவெடிப்பு என தகவல் வெளியானது. இருப்பினும், பிறகு போலீசார் இது தீவிபத்து என்பதை உறுதி செய்தனர். புத்தாண்டு பிறந்து, கொஞ்ச நேரத்திலேயே, அதாவது உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் கூறுகையில், "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன" என்றார்.

என்ன நடந்தது!

சுவிட்சர்லாந்தின் ஆடம்பரமான ஆல்ப்ஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் நகரமான கிரான்ஸ் மான்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 'லே கான்ஸ்டலேஷன்' (Le Constellation) என்ற பாரில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையினர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.

புத்தாண்டைக் கொண்டாடப் பல நூறு பேர் அங்குத் திரண்டிருந்த நிலையில், இந்தத் தீ விபத்து பெரும் துயரமான சம்பவமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக கிரான்ஸ் மான்டானாவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என்று போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பாரில் இருந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

40 பேர் பலி

இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், 40 பேர் இறந்து இருக்கலாம் என்றும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு கருதி கிரான்ஸ் மான்டானா மீது விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட வான வேடிக்கை காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், போலீசார் இதை உறுதி செய்யவில்லை.

கிரான்ஸ் மான்டானா

கிரான்ஸ் மான்டானா என்பது ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஆடம்பரமான பனிச்சறுக்கு ரிசார்ட் நகரமாகும். சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணத் தூரத்தில் இது அமைந்துள்ளது. 87 மைல் நீளமுள்ள அழகிய பனிச்சறுக்கு சரிவுப் பாதைகளைக் கொண்ட இந்த நகரம், பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+