இப்படி கூட சாவு வருமா.. மைதானத்தை தாக்கிய மின்னல்.. கால்பந்து வீரர் துடிதுடித்து பலி! ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

லிமா: பெரு நாட்டில் புட்பால் போட்டி ஒன்று நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. இதில் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் எப்போது யாருக்கு எந்த ரூபத்தில் மரணம் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. இதனால் தான் பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவர்களும் உண்டு.. வழுக்கி விழுந்து செத்தவனும் உண்டு என்பார்கள்.

peru football world

அப்படி தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மைதானத்தில் விளையாடிய வீரர், திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

ஷாக் சம்பவம்: பெரு நாட்டில் கால்பந்து போட்டி நடந்து வந்த நிலையில், அந்த மைதானத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதில் களத்தில் இருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் ஹுவான்காயோ என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு மைதானத்தில் ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய இரு அணிகள் மோதிய போட்டி நடந்துள்ளது. அப்போது தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு சில வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

என்ன நடந்தது: அந்த போட்டி நடந்து கொண்டு இருந்த போது திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பொதுவாகக் கால்பந்து போட்டி மழை பெய்யும் போது தொடர்ந்து நடக்கும். இதனால் அந்த போட்டி தொடர்ந்து நடந்துள்ளது. இருப்பினும், ஒரு கட்டத்தில் கனமழை கொட்டியதால் விளையாடவே முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், அனைத்து வீரர்களையும் மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டு இருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு மின்னல் தாக்கியுள்ளது. அதில் 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டி லா குரூஸ் மேசா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மைதானத்தில் இருந்த மேலும் சில வீரர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழப்பு: உயிரிழந்த வீரர் ஜோஸ் ஹ்யூகோ டி லா க்ரூஸ் மேசா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்கள வீரரான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், எரிக் எஸ்டிவன் செசென்டே குய்லர், ஜோஷெப் குஸ்டாவோ பரியோனா சோக்கா மற்றும் கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா ஆகிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்னல் தாக்கிய போது உயிரிழந்த க்ரூஸ் மேசாவுக்கு மிக அருகில் கோல் கீப்பர் ஜுவான் சோக்கா சென்று கொண்டு இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இப்போது ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+