புதின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்.. சோஷியல் மீடியாவில் புலம்பி தள்ளிய டிரம்ப்!
நியூயார்க்: உக்ரைன்-ரஷ்யா போரை நான் ஆட்சிக்கு வந்தால் நிறுத்துவேன் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்காக சில நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் போர் நிற்கவில்லை. இதனால் டென்ஷனான அவர், புதின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார் என புலம்பியுள்ளார்.
போர் நிறுத்த நடவடிக்கைக்காக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் போர் இதுவரை நிறுத்தப்படாமல் இருப்பது அமெரிக்காவுக்கு டென்ஷனை ஏற்றியிருக்கிறது.

இந்த போருக்கு காரணமே அமெரிக்காதான் என்று சொல்ல முடியும். உக்ரைன் முன்னாள் சோவியத் நாடு. இப்போது சுதந்திர நாடாக இருக்கிறது. நமக்கு பாகிஸ்தானை போல ரஷ்யாவுக்கு உக்ரைன் பக்கத்து நாடு. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில்தான் நேட்டோ உள்ளே நுழைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் எந்த நாடு இணைந்தாலும், அந்நாட்டு பாதுகாப்புக்கு நேட்டோ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். உக்ரைன் இந்த முயற்சியை மேற்கொண்டபோது அதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆனால் ஜெலன்ஸ்கி கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தார். எனவே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்தது. போர் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் போர் முடிவுக்கு வரவில்லை. இதனை நான் சரி செய்கிறேன் என்று கூறி டிரம்ப் உள்ளே மூக்கை நுழைத்தார். இஷ்டத்திற்கும் ரஷ்யா ஆதரவு செயல்பாட்டில் இறங்கிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உக்ரைன் அதிபரை கூப்பிட்டு வைத்து திட்டினார்.
போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் அது தற்போது மூர்க்கமடைந்திருக்கிறது. காரணம் ரஷ்யாவின் தாக்குதல். ரஷ்யா அவ்வளவு எளிதில் இந்த போரை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. எனவே தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்கு டிரம்ப் கண்டனம் முழங்கியிருக்கிறார்.
"பொதுமக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடந்த புதினுக்கு எந்த தேவையும் கிடையாது. இப்போதுதான் வியஷம் தெரிய வருகிறது. இந்த பொரை நிறுத்த புதினுக்கு விரும்பம் இல்லை போல. என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். வங்கி தடை மற்றும் இரண்டாம் நிலை தடை உத்தரவு மூலம்தான் கடைசியில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications