For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டினருக்கு எதிரான டிரம்ப்பின் குடிவரவு மசோதா.. நாடாளுமன்றத்தில் தோல்வி

அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருத்த மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருத்த மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த சட்டம் காரணமாக இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டம் நிறைவேறாதது மக்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டிரம்ப் அமெரிக்க நாட்டில் குடியேறி இருக்கும் வெளிநாட்டு மக்களை எப்படியாவது வெளியேற்ற நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் இதில் பெரிய தோல்வியை தழுவுகிறார்.

மசோதா

மசோதா

டிரம்ப் அறிமுகப்படுத்திய இந்த சட்டத்திற்கு ''எல்லை பாதுகாப்பு மற்றும் குடிவரவு சீர்திருத்த சட்டம்'' என்று பெயர் வைக்கலாம். அதன்படி அமெரிக்க நாட்டில் குடியேற வேண்டும் என்றால், மிகவும் அதிகபட்ச திறமை தேவைபடும். அதேபோல் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் உயர் பதவியில் சேர முடியாது. இந்த மசோதாவை நேற்று அவர் அவையில் தாக்கல் செய்தார்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த மசோதாவால் இந்தியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இப்போது அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலும் இந்தியர்களே உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், அமெரிக்காவில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நபர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

ஆனால் இந்த மசோதா அவையில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 121 பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அதேபோல் இந்த மசோதாவிற்கு எதிராக 301 பேர் வாக்களித்துள்ளனர். இதனால் டிரம்ப் மிகவும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியர்களுக்கு சாதகமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கவில்லை

வாக்களிக்கவில்லை

அமெரிக்க அவையில் டிரம்ப்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் டிரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதே சமயத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த சிலரும் கூட இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்து டிரம்ப்பிற்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

English summary
Trump's US Immigrant bill failed in Parliament. This failure in the bill may give a positive boost to US-based Indian workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X