4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்!-வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவம் இரண்டாவது நாளாக தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் 4.50 லட்சம் மக்களின் உயிர் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சிரியாவில் குர்து போர் படைகள் மிகவும் முக்கியமானது ஆகும். குர்து போராளி குழுக்களின் ஒய்பிஜி படை மற்றும் அரபு படை, அமெரிக்க படை இணைந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போர் செய்தது.

    சிரியாவில் ஐஎஸ் அமைப்பை இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் காலி செய்தனர். குர்தீஷ் போராளி குழுதான் இதற்கு தலைமை தாங்கியது.

    நட்பு இல்லை

    நட்பு இல்லை

    குர்து படையும் அமெரிக்க படைகளும் மிகவும் நெருக்கமானது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக இவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள். அதே சமயம் துருக்கி நாடு குர்து படைகளை தீவிரவாதிகள் என்று கூறிவருகிறது. துருக்கியில் குர்து படைகள் கலகம் உண்டு பண்ணுகிறது என்று துருக்கி குறிப்பிட்டு வருகிறது.

    என்ன பாதுகாப்பு

    என்ன பாதுகாப்பு

    இத்தனை வருடங்கள் துருக்கியிடம் இருந்து குர்து படைகளை அமெரிக்கா காத்து வந்தது. ஆனால் திடீர் என்று துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதாவது குர்தீஷ் போராளி குழுவிற்கு கொடுத்து வந்த ராணுவ ஆதரவை வாபஸ் பெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    போர்

    போர்

    அமெரிக்க படைகள் வாபஸ் வாங்கப்பட்டது தற்போது துருக்கிக்கு கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதனால் நேற்று காலையில் இருந்து துருக்கி படைகள் சிரியா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் இருக்கும் குர்து படைகள் மீது கடுமையாக துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இன்று இரண்டாவது நாளாக சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு இருக்கும் துருக்கி படைகளை மொத்தமாக அழிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருகிறது. ஏவுகணைகள், குண்டுகள், துப்பாக்கி சூடு என்று அனைத்து வகையிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    சிரியா எப்படி

    சிரியா எப்படி

    வடமேற்கு சிரியாவில் இந்த தாக்குதல் நடந்து வருகிறது. அங்கு குர்து படைகள் மட்டுமின்றி பொதுமக்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரியா போரை கண்காணிக்கும் உலக அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எப்படி உயிர்

    எப்படி உயிர்

    இதனால் 4.50 லட்சம் மக்கள் உயிர் ஆபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். சிரியாவில் குர்து படைகள் மீது தாக்குதல் நடத்தினால் மீண்டும் அங்கு அமெரிக்கா தனது படைகளை குவிக்கும். துருக்கிக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று டிரம்ப் கடந்த வருடம் கூறினார். ஆனால் இது தொடர்பாக இப்போது வரை அவர் எதுவுமே செய்யாமல் அமைதி காத்து வருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+