'அகண்ட வங்கதேசம்' இந்தியாவை வம்புக்கு இழுக்கும் துருக்கி ஆதரவு குழு.. புதிய மேப் வெளியிட்டு அடாவடி!
டாக்கா: இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு டிரோன்கள் சப்ளை செய்து, இந்தியர்கள் கோபத்திற்கு உள்ளாகியுள்ள துருக்கி, வங்கதேசத்திலும் தனது அடாவடி செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் துருக்கி ஆதரவு என்.ஜி.ஓ ஒன்று கிரேட்டர் வங்கதேசம் என்ற அடைமொழியுடன் இந்தியாவின் பல மாநிலங்களை உள்ளடக்கிய புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் ராணுவ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் உள்ளார்.

கிரேட்டர் பங்களாதேஷ் மேப்
வங்கதேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த நாட்டின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அதீத நெருக்கம் காட்டும் முகம்மது யூனுஸ் அரசு, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கும் போக்கே காணப்படுகிறது. வங்கதேசத்தில் நடக்கும் இந்த மாற்றங்களை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வறுகிறது.
இந்த நிலையில்தான், வங்கதேசத்தில் செயல்படும் தன்னார்வ அமைப்பு ஒன்று கிரேட்டர் பங்களாதேஷ் என்ற மேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. துருக்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் இந்த என்.ஜி.ஓ வெளியிட்டு இருக்கும் வரை படத்தில், மியான்மரின் அரகன் மாகாணம், இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட் ஒடிஷா மற்றும் ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி
டாக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் இந்த வரைபடம் ஒட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் நடமாடும் பல்கலைக்கழங்களில் இந்த வரைபடம் ஒட்டப்பட்டு இருப்பது விஷயத்தின் தீவிரத்தை காட்டுவதாக உள்ளது. வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து துருக்கி ராணுவத்தின் செயல்பாடுகளும் என்ஜிஓக்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானிடம் நெருக்கமான உறவு கொண்டு இருக்கும் துருக்கி, சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் துருக்கி ஆதரவாக இருந்தது. துருக்கி அனுப்பிய டிரோன்களை வைத்தே பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் இந்திய படைகளால் அழிக்கப்பட்டது. இந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் சேதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
துருக்கி வங்கதேசம் உறவு
இதில் துருக்கி பெரிய அளவில் சப்போர்ட் செய்தது கண்டறியப்பட்டது. துருக்கி அதிக அளவில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கி இருந்தது. பாகிஸ்தானுக்கு அப்பட்டமான ஆதரவை தெரிவித்த துருக்கிக்கு எதிரான ஆக்ஷன்களை இந்தியா எடுக்க தொடங்கியுள்ளது. துருக்கிய நிறுவனமான செலிபி, இந்திய விமான நிலையங்களில் செயல்படுவதற்கு இந்தியா தடை விதித்தது. அதேபோல, துருக்கிக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
இத்தகைய சூழலில், தான் துருக்கி ஆதரவு கொண்ட என்.ஜி.ஓ இந்திய பகுதிகளை உள்ளடக்கி கிரேட்டர் பங்களாதேஷ் என வரைபடம் வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கிக்கும் - வங்கதேசத்திற்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications