For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2022: லைவ் ரிப்போர்ட் கொடுத்த நிருபரை தள்ளிவிட்ட சீன செக்யூரிட்டி அதிகாரி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸை நேரலை செய்து கொண்டிருந்த டிவி செய்தியாளரை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சீன தலைவர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் தொடக்க போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள தேசிய விளையாட்டரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீன வீரர் இந்த விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதை அமெரிக்க கண்டனம் தெரிவித்தது.

தலிபான்களை சந்தித்த ஒசாமா பின்லேடன் மகன்.. பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்! தலிபான்களை சந்தித்த ஒசாமா பின்லேடன் மகன்.. பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்!

நெதர்லாந்து

நெதர்லாந்து

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகளை நெதர்லாந்தை சேர்ந்த தனியார் செய்தித் தொலைகாட்சியின் சீனாவில் உள்ள நிருபர் ஜோர்ட் டென் தாஸ் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீன அரசின் பாதுகாவலர் ஒருவர் நிருபரை வேகமாக தள்ளிவிட்டார். இந்த காட்சி அந்த தொலைகாட்சியின் லைவில் வந்தது. இதனால் தொகுப்பாளரும் அதிர்ச்சி அடைந்தார். எனினும் அவர் தொடர்ந்து பேச முயன்ற போது அங்கு வந்த மற்றொரு பாதுகாவலர் கேமராவில் கைகளை வைத்து மறைத்து கொண்டதாக புகார் எழுந்தது.

கண்டனங்கள்

கண்டனங்கள்

அந்த நிருபர் தான் வந்ததற்கான காரணத்தையும் லைவ் ஓடி கொண்டிருக்கிறது என்பதையும் அந்த பாதுகாவலரிடம் கூறியும் அவர் கேட்டபாடில்லை. பாதுகாவலரின் இந்த அடாவடித்தனத்திற்கு கண்டனங்கள் குவிகின்றன. இதுகுறித்து அந்த தொலைகாட்சி நிர்வாகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிருபர் ஜோர்ட் டென் தாஸ் தற்போது நன்றாக இருக்கிறார்.

நிருபர்களின் நிலை

நிருபர்களின் நிலை

பாதுகாவலர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினாலும் அவர் வேறு ஒரு இடத்திலிருந்து நிகழ்ச்சியை நேரலை வழங்கினார். சீனாவில் உள்ள நிருபர்களின் நிலை இதுதான் என அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. விளையாட்டு போட்டிகளின் போது சீனாவில் நிருபர்கள் தங்கள் பணிகளை செய்ய நிறைய பிரச்சினைகள் உள்ளன.

ஒலிம்பிக் கமிட்டி

ஒலிம்பிக் கமிட்டி

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கமளிக்கையில் நெதர்லாந்து நாட்டு டிவி நிருபருக்கு நடந்தது எங்கோ நடந்த சம்பவம். இது உண்மையில் பெய்ஜிங் விளையாட்டு போட்டியில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை சேகரிப்பதிலிருந்து எந்த வித பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது.

English summary
TV reporter dragged away by Chinese security offical while doing live on Winter Olympics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X