வெடிகுண்டு மிரட்டல்: பாரீஸ் வந்த பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா, கனடாவுக்கு திருப்பிவிடப்பட்டன
பாரீஸ்: அமெரிக்காவில் இருந்து பாரீஸ் கிளம்பிய இரண்டு பிரான்ஸ் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து திருப்பிவிடப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானம் 65 497 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை பாரீஸுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் திருப்பிவிடப்பட்டு உடா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரில் இரவு 7.30 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் வாஷிங்கடன் நகரில் இருந்து பாரீஸ் கிளம்பிய ஏர் பிரான்ஸ் விமானம் 55ம் பாதுகாப்பு காரணங்களால் கனடாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த விமானம் கனடாவில் உள்ள ஹாலிபாக்ஸ் விமான நிலையத்தில் இரவு 10.15 மணிக்கு தரையிறங்கியது.
இரண்டு விமானங்களும் கிளம்பிய பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தான் விமானங்களை சோதனையிட உடனே அவை திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரீஸில் 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 129 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம்கள்:
அமெரிக்காவின் மேரிலேண்டில் இருந்து சிகாகோ சென்ற விமானத்தில் ஒரு இஸ்லாமிய பெண் மற்றும் 3 இஸ்லாமிய ஆண்கள் செல்போனில் செய்திகளை பார்த்ததற்காக அவர்கள் மீது சந்தேகப்பட்டு விமானத்தை பால்டிமோர்-வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தினர். அந்த 4 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று தெரிந்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications