For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ், பணம் மூலமாக ஈரானை வீழ்த்தப் பார்க்கிறது அமெரிக்கா.. ஈரான் மதத் தலைவர் புகார்

Google Oneindia Tamil News

துபாய்: பண பலத்தையும், செக்ஸையும், மேற்கத்திய கலாச்சாரத்தையும் ஈரானுக்குள் திணித்து அதன் மூலமாக ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா முயல்வதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார்.

ஈரான் அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் உள்ளோரை வளைக்க அமெரிக்கா முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காமேனியின் இந்தப் புகார் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக ஈரா்னில் பல்வேறு பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அமெரிக்கத் தூண்டுதலின் பேரில் இவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பணமும் - செக்ஸும்

பணமும் - செக்ஸும்

காமேனி இதுகுறித்துக் கூறுகையில் பணத்தாலும், செக்ஸாலும் ஈரானுக்குள் ஊடுறுவி விட முடியும் என அமெரிக்கா நினைக்கிறது. அதை பயன்படுத்தியும் வருகிறது. இங்குள்ள கட்டுப்பாட்டை காலி செய்ய அது முயல்கிறது.

மேற்கத்திய வாழ்க்கை

மேற்கத்திய வாழ்க்கை

இங்கு மேற்கத்திய வாழ்க்கை முறையை ஊடுறுவ முயற்சிக்கிறது. இங்குள்ள மத நம்பிக்கைகளை காலி செய்ய முயல்கிறது. மக்களை மாற்ற முயற்சிக்கிறது. அவர்களை அமெரி்க்காவின் பக்கம் திருப்ப முயற்ச்சிக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வலை

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வலை

அதிகாரத்தில் உள்ளவர்கள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் என தேர்வு செய்து இவர்கள் வளைக்கப் பார்க்கின்றனர். இது ஈரானுக்கு அபாயகரமானது. நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார் காமேனி.

தொடர் கைது

தொடர் கைது

ஈரானில் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

English summary
The United States is using sex, money and Western lifestyles to infiltrate Iran's decision-making elite, the Islamic republic's supreme leader Ayatollah Ali Khamenei said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X