விந்தணுவில் பரவும் "கில்லர்" வைரஸ்.. அடுத்தடுத்து 19 பேர் பலி.. அதிர்ந்து போன உலக சுகாதார மையம்!

Subscribe to Oneindia Tamil

கம்பாலா: உகாண்டாவில் தற்போது வைரஸ் நோய் தொற்று ஒன்று தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே கடந்த 2 வருடமாக முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனித குலத்தை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது. இதன் பாதிப்பு அளவு கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் குறைய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்தான் உகாண்டாவில் தற்போது எபோலா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. ஆப்ரிக்காவில் அடிக்கடி பரவும் இந்த வைரஸ்.. தற்போது உகாண்டாவில் வேகமாக பரவி வருகிறது.

 வைரஸ்

வைரஸ்

எபோலா நோய் என்பது எபோலா வைரஸ் மூலம் பரவும் நோயாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 2-3 நாட்களில் அதன் அறிகுறி தெரிய தொடங்கும். பொதுவாக காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். அதேபோல் எபோலா மூலம் பாதிக்கப்பட்டால் வாந்தி எடுப்பது, வயிற்றுப்போக்கு ஏற்படுவது, தோல்களில் சிரங்கு ஏற்படுவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும். போக போக இதன் அறிகுறிகள் இன்னும் தீவிரம் ஆகும்.

எபோலா

எபோலா

சமயங்களில் இந்த எபோலா காரணமாக சிலருக்கு ரத்த போக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக 25 - 90 சதவிகிதம் பேர் வரை இந்த வைரஸ் காரணமாக பலியாக வாய்ப்புகள் உள்ளன. உடலில் நீர் இழப்பு காரணமாக பொதுவாக இந்த வைரஸ் தாக்கி மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. முதல் அறிகுறி ஏற்பட்டு 6 - 15 நாட்களில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டால் இந்த நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன.

 எபோலா நோய்

எபோலா நோய்

1976ம் ஆண்டில் காங்கோவில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது. கடத்தி 20 வருடங்களாக ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் அடிக்கடி பரவி வருகிறது. மனிதர்களின் ரத்தம், எச்சில், வாந்தி, முத்தம், விந்து அணு ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது உகாண்டாவில் இந்த வைரஸ் தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த நாட்டில் தற்போது லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இந்த திடீரென பரவல் காரணமாக உலக சுகாதார மையமும் ஆடிப்போய் உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

அங்கு 54 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 19 பேர் இந்த வைரஸ் காரணமாக அங்கு பலியாகிவிட்டனர். சூடான் நாட்டு வகை எபோலா வைரஸ் தற்போது அங்கு பரவி வருவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பலர் பாதுகாப்பற்ற முறையில் அங்கு பாலியல் உறவு கொள்வதால், விந்தணு மூலம் அதிக அளவில் அங்கே நோய் பரவி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு இந்த அறிகுறி ஏற்பட்டுள்ளதால் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+