12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள்.. ஒரு கிராமத்தையே உருவாக்கிய ஒற்றை ஆள்!
கம்பாலா: மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன சூழலில், உகாண்டாவில் ஒற்றை ஆளாய் ஒரு சிறிய கிராமத்தையே ஒருவர் உருவாக்கியுள்ளார். அவரும் அவரது 12 மனைவிகளும் இதனை செய்திருக்கின்றனர்.
உகாண்டாவில் கடந்த காலங்களில் குழந்தை திருமணம் எனும் பழக்கம் இருந்தது. ஆனால், 1995ல் இதனை அந்நாட்டு அரசு தடை செய்தது. ஆனால், அதற்கு பதிலாக பலதார மனம் என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. எனவே இந்நாட்டில் சுமார் 8.3% பெண்களும் 7.1% ஆண்களும் பலதார திருமண உறவில் இருக்கின்றனர். இதில் ஒருவர்தான் மூசா ஹசஹ்யா கசேரா. இவர் உகாண்டாவின் முகிசா கிராமத்தில் வசிக்கும் இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். அதே நேரத்தில் கசாப்பு கடையிலும் வேலை செய்து வருகிறார்.

தன்னுடைய குடும்பம் குறித்து இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு அளித்த பேட்டியில், குடும்பம் எப்படி உருவானது? முதல் திருமணம் எப்போது நடந்தது என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது,
“எனக்கு 17 வயதில் முதல் முறையாக திருமணம் நடந்தது. அப்போது நான் ஒரு துடிப்பான இளைஞன். என்னுடைய ஊர் முழுவதையும் வெறும் கால்களாலேயே நான் சுற்றி வந்திருக்கிறேன். கிராமத்தின் மூலை முடுக்குகள் அனைத்தும் எனக்கு தெரியும். நான் என்னுடைய மனைவியை அவ்வளவு நேசித்தேன். திருமணத்திற்கு பின்னர் ஓரிரு குழந்தைகள் பிறந்தன. அதேபோல, எனக்கு மற்றொரு திருமணம் நடந்தது. இப்படி நடக்கும் திருமணங்கள் மிகவும் இயல்பானவை.

என்னுடைய உறவினர்கள் அனைவருக்கும் இதேபோன்று திருமணங்கள் நடந்திருக்கிறது. எனவே இப்படியான திருமணங்கள் குறித்து எந்த ஆச்சரியமும் கிடையாது. அடுத்தடுத்து திருமணங்களில் எனக்கு வாழ்க்கை துணைவியர்கள் கிடைத்தனர். குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு இது நகைப்புக்கு உரியதாகவும் அல்லது சொகுசான உறவுமுறை போன்றும் தோன்றும். ஆனால் எங்களுக்கு இது மிகுந்த பிரச்னையை ஏற்படுத்தியது.

குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் நாங்கள் எதிர்கொண்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். குழந்தைகளும், மனைவிகளும் உணவும், தங்குவதற்கு உரிய இடமும் இன்றி தவித்தனர். வாழ்க்கை பெரிய போராட்டமாக இருந்தது. இப்போது எனக்கு மொத்தம் 12 மனைவிகள் இருக்கின்றனர். குழந்தைகளாக 102 குழந்தைகள் இருக்கின்றனர். பேரக்குழந்தைகள் 578 பேர் இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், இது குடும்பம் கிடையாது, ஒரு சிறிய கிராமம் என்று கலாய்த்துள்ளனர்.
உகாண்டா அதிக பிறப்பு விகிதம் கொண்ட நாடாக இருக்கிறது. ஆனால், வறுமை உச்சத்தில் இருக்கிறது. மட்டுமல்லாது பால்வினை நோய்களும் அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications