Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநங்கைகள் எப்படி பெண்ணாக முடியும்? பெண்ணாக பிறந்தால் தானே..கோர்ட் போட்ட உத்தரவு..கிளம்பிய விவாதம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பெண்ணாக பிறந்தவர் மட்டுமே சட்டப்படி பெண்ணாக கருத முடியும் எனவும் திருநங்கைகள் பெண்கள் இல்லை என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது உலக அளவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஆண்களாக பிறந்தவர்கள் உணர்வில் பெண்களாக இருப்பதால் அவர்கள் திருநங்கைகள் என அழைக்கப்படும் நிலையில், அவர்களின் மனதை புண்படுத்துவது போல இந்த தீர்ப்பு இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

ஆண்களாகப் பிறந்து உடலளவில் ஹார்மோன் மாற்றத்தாலும் மனதளவில் பெண்களாக உணர்ந்தவர்கள் தங்களை திருநங்கைகளாக மாற்றிக் கொள்கின்றனர். பெண்கள் போலவே உடை அணிந்து முழுக்க முழுக்க பெண்களாகவே தங்களை உணர்கிறார்கள்.

கடந்த காலங்களில் அவதூறாக அவர்கள் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக அளவில் அவர்களுக்கான அங்கீகாரம் இருக்கிறது. இந்த நிலையில் தான் இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது.

UK Women transgender

சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது தொடர்பான வழக்கு இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் பெண்ணாக பிறந்தவர் மட்டுமே பெண்ணாக கருத முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. 88 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் சமத்துவச் சட்டம் 2010-ன் படி பாலினத்தின் வரையறை விளக்கப்பட்டுள்ளது. ஒருவரது பாலினம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும் என சட்டம் சொல்கிறது.

அதாவது குறிப்பிட்ட பாலினத்தை சேர்ந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவே இந்த சட்டம். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய இயற்றப்பட்ட சட்டங்கள் ஆண்களுக்கு பொருந்தாது. ஆண்களுக்காக பொருத்தப்பட்ட சட்டங்கள் பெண்களுக்கு பொருந்தாது. சமத்துவ சட்டத்தின் படி பிறப்பின் அடிப்படை என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் ஒரு நபரை ஆண் அல்லது பெண் என பிறப்பின் அடிப்படையில் தான் குறிப்பிடப்படுகிறது.

அவர்களது பயாலஜிக்கல் பண்புகளும் அதன் அடிப்படையில் தான் இருக்கும், எனவே இதில் எவ்வித குழப்பமும் இல்லை, பெண்களாக பிறந்தவர்கள் தான் பெண்கள் என கருதப்படுவார்கள், அதே நேரத்தில் சமத்துவம் சட்டம் 2010 பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் பொருந்தும், பெண் சார்ந்த திட்டங்கள் திருநங்கைகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த விவகாரம் தான் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மனதளவில் பெண்ணாகவும் உடலளவில் ஆணாகவும் இருந்தவர்கள் தங்களை பெண்களாகவே உணர்கிறார்கள். பெண்களாக மனதளவில் மட்டுமல்லாமல் உடல் அளவிலும் தங்களை மாற்றிக் கொண்டு இருக்கும் அவர்களை இந்த தீர்ப்பின் மூலம் இழிவு செய்யக்கூடாது. அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியம் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+