கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இலங்கை தூதரகத்தில் இறுமாப்புடன் நின்று கொண்டு ஈழத் தமிழர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வேன் என பகிரங்க மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரி பிரிய பெர்னாண்டோவை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டன் இலங்கை தூதரகத்தில் 70-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை துக்க தினமாக கடைபிடித்து ஈழத் தமிழர்கள் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

UK MPs demand to deport Sri Lankan Army officer Priyankara Fernando

அப்போது வெறி கொண்ட சிங்கள ராணுவ அதிகாரியும் ஐநா சபையின் போர்க்குற்றச்சாட்டில் சிக்கியவருமான பிரிய பெர்னாண்டோ, கழுத்தை அறுத்து போட்டுவிடுவேன் என சைகையால் ஈழத் தமிழர்களை மிரட்டினார். அவர் மூன்று முறை இதேபோல் மிரட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறது.

இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அந்த அதிகாரியை உடனே நாடு கடத்த வேண்டும் என லண்டன் எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த வெறித்தனம் இங்கிலாந்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
UK MPs had demanded to deport the Sri Lankan Army officer Priyankara Fernando who threats Eelam Tamils in London.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற