உங்க நிலைப்பாட்டை மாத்திக்கோங்க.. திடீரென ஆசிய நாடுகளை சீண்டும் உக்ரைன் அதிபர்.. ஏன் இப்படி?
கீவ்: ‛‛ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஐரோப் தனது நிலைப்பாட்டை மாற்றியது போன்று ஆசிய நாடுகளும் மாற வேண்டும். இந்த விவகாரத்தில் ஆசிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதமாக போர் தொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் இலக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. இதனால் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த போரில் உக்ரைன்-ரஷ்யா படைகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தும் ரஷ்யா படைகளுக்கு உக்ரைனும் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள்
இந்த எதிரெதிர் தாக்குதலால் இருதரப்பிலும் பலிகள் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா தரப்பில் படை வீரர்கள், அதிகாரிகள் இறக்கின்றனர். உக்ரைனில் படை வீரர்களும், அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். இதனால் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. மேலும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

ஆசிய நாடுகளின் நிலைப்பாடு
உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் நடுநிலைமை வகிக்கின்றன. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து அமெரிக்காவில் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனை குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். இதுபற்றி விலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:

மாறியது ஐரோப்பா பார்வை
உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க நேட்டோ உறுப்பினர்கள் காலம் தாழ்த்தினர். உக்ரைனை அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். இதனால் தான் உக்ரைனை நேட்டோ படையில் இணைக்காமல் இருந்தனர். இது மிகப்பெரும் தவறு. தற்போது ரஷ்யாவின் போருக்கு எதிராக உக்ரைன் வலிமையான தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த வலிமை தான் உக்ரைன் மீதான ஐரோப்பிய நாடுகளின் பார்வையை மாற்றியுள்ளது.

ஆசிய நாடுகள் மாறனும்
ஆசிய நாடுகள் உக்ரைன் பற்றியும், தங்களின் அணுகுமுறையையும் மாற்றி கொள்ள வேண்டும். ரஷ்யாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு உக்ரைனுக்கு ஆசிய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும். இதில் ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையை ஆசிய நாடுகள் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன். இது எங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்'' என்றார்.

நடந்தது என்ன?
முன்னாதாக ஏப்ரல் துவக்கத்தில் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்தின் மீது ஐநா பொதுச்சபையில் வாக்களிப்பு நடத்தப்பட்டது. இதில் 93 நாடுகள் ஆதரவு அளித்தனர். 24 நாடுகள் எதிர்த்து வாக்களித்தனர். குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, ஈராக், குவைத், மலேசியா, மாலத்தீவுகள், இலங்கை,தற ஏமன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஆசிய நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தன. இதேபோல் பல்வேறு வாக்கெடுப்புகளில் இருந்து ஆசிய நாடுகள் விலகி இருந்தன. இந்நிலையில் தான் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications