அமெரிக்காவிற்கு கல்தா! சட்டென இறங்கி வரும் உக்ரைன் அதிபர்.. ரஷ்யாவின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்?
மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையிலான போரில் 1100 உக்ரைன் குடிமக்கள் பலியாகி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
அதேபோல் 10 மில்லியன் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று ரஷ்யா உக்ரைன் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. துருக்கியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

உக்ரைன் அதிபர்
இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை ஒன்றை பற்றி ஆலோசனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செலன்ஸ்கி அளித்த பேட்டியில், உக்ரைன் நாடு நடுநிலையான நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த கோரிக்கையை நாங்கள் மிகவும் கவனமாக பரிசீலித்து வருகிறோம். பாதுகாப்பு மற்றும் நடுநிலை ஆகிய கோரிக்கைகளை ஏற்க தயார்.

அணு ஆயுதம்
அதேபோல் எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை மிகவும் கவனமாக பரிசீலித்து வருகிறோம். ஆனால் எங்கள் நாட்டின் ராணுவத்தை கலைக்க முடியாது. ரஷ்யா இதை ஒரு கோரிக்கையாக வைத்து வருகிறது. அதை மட்டும் ஏற்க முடியாது, என்று செலன்ஸ்கி கூறி உள்ளார்.

நடுநிலை
உக்ரைன் நாடு neutral எனப்படும் நடுநிலை நிலைப்பாட்டை அடைய வேண்டும் என்பது அதிபர் புடினின் கோரிக்கைகளில் ஒன்றாகும். இதன் அர்த்தம் ஆஸ்திரியா, ஸ்வீடன் போல நேட்டோவில் இணையாமல் தனியாக இருக்க வேண்டும். மேற்கு நாடுகளுடன் சரி, ரஷ்யாவுடனுடன் சரி நெருக்கமான உறவு காட்டாமல், அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் கோரிக்கை. அதே சமயம் ஸ்வீடன் போல ஐரோப்பாவிலும் இணைய கூடாது என்று உக்ரைனுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா
இந்த கோரிக்கையை தற்போது ஏற்றுக்கொள்ள தயார் என்று உக்ரைன் முன் வந்துள்ளது. இதை பற்றி ஆலோசிக்க தயார் என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை தற்காலிகமாக நிறுத்துங்கள், இதை பற்றி விவாதிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கையை உக்ரைன் பரிசீலனை செய்ய ஏற்றுக்கொண்டு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவை கைவிட்டு நடுநிலையாக இருக்க உக்ரைன் ஆலோசித்து வருகிறது. இதனால் இந்த போர் வரும் நாட்களில் அமைதியை நோக்கி திரும்புமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications