பேராபத்து.. அணு ஆயுதத்தால் 3வது உலக போர்.. விளைவுகள் படுமோசமாக இருக்கும்.. ரஷ்ய அமைச்சர் வார்னிங்
: 3வது உலக போர் குறித்து உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது
மாஸ்கோ: 3வது உலகப்போர் ஏற்பட்டால், அவைகளில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும், மற்ற வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால், அது மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்றும் உக்ரைனை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
Recommended Video
சச்சரவு வேண்டாம்! இருவருக்குமே அங்கீகாரம்! ஒசூர் மேயர் யார்? பரபரக்கும் மறைமுகத் தேர்தல்!
ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்து வந்த நிலையில், அதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. அதனாலேயே உக்ரைன் நாட்டை சுற்றி ராணுவத்தை நிறுத்தியது.
இதையடுத்து, கடந்த வாரம் திடீரென உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடர்ந்தது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.. இதனால் ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடையும் விதித்து வருகின்றன.

கண்டனம்
ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. ஆனாலும் ரஷ்யா யார் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது... கெர்சான் நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றி உள்ளது. கார்கிவ் நகரை கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவுகளோ படுபயங்கரமாகி வருகிறது.. உக்ரைன் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது...

உயிரிழப்பு
இதில் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் என்கிறார்கள். 3,00-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.. இதனால் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.. அத்துடன், உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்யா அறிவித்துவிட்டது... அதனால் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை ஒவ்வொன்றாக அனுப்பி வைத்து வருகின்றன..

பேராபத்து
இந்நிலையில், உக்ரைனுடன் இன்று இரவு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.. அத்துடன், 3வது உலகப்போர் ஏற்பட்டால், அவைகளில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் சொல்லும்போது, "ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சந்தித்து வரும் உக்ரைன், மற்ற வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால், அது மிகப்பெரிய ஆபத்தாக மாறும்... வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

ரஷ்யா தனி கிடையாது
ஒருவேளை 3வது உலகப் போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் நிச்சயம் பயன்படுத்தப்படும்... அது பேரழிவை கண்டிப்பாக ஏற்படுத்தும். ரஷ்யா தனி நாடு கிடையாது.. பல நாடுகள் ரஷ்யாவுடன் நட்பு நாடுகளாகவே தொடர்கின்றன.. போரினால், பொருளாதார தடை ஏற்படும் என்று நினைத்தோம்.. ஆனால், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் மீது குறி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைககு நாங்கள் தயார்தான்.. ஆனால், அதற்கு தடையாக இருப்பது அமெரிக்காதான்.. " என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications