ஷாக்கிங்! உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா சரமாரி தாக்குதல்.. வேகமாக பரவும் தீ.. வெடிக்கும் அபாயம்!
மாஸ்கோ: உக்ரைனின் சபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்தே ரஷ்ய உக்ரைனின் அணு மின் நிலையங்களை குறி வைத்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் அணு உலைகளை ரஷ்யா தேடி தேடி பிடித்துக்கொண்டு இருக்கிறது. உக்ரைன் நாடு தங்களின் மின்சார தேவைக்கு அதிக அளவில் அணு உலைகளை நம்பித்தான் இருக்கிறது.
உக்ரைன் நாட்டின் 52 சதவிகிதம் மின் தேவையை அணு உலைதான் பூர்த்தி செய்கிறது. சில அணு உலகைளில் 4-5 ரியாக்டர்கள் உள்ளன.

வேகம்
இதைத்தான் ரஷ்யா கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. அங்கு மொத்தம் 15 அணு மின் நிலைய உலைகள் உள்ளது. கேல்நிட்ஸ்கி, ரிவின், தென்மேற்கு, சசபோரியா, தெற்கு உக்ரைன் ஆகிய பகுதிகளில் இந்த அணு உலைகள் உள்ளது. இந்த பகுதிகளை நோக்கி ரஷ்யாவின் படைகள் வேகமாக் முன்னேடி வருகின்றன. இந்த அணு உலைகள் இருக்கும் பகுதிகள் ஏற்கனவே சில ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

தாக்குதல்
இந்த நிலையில்தான் உக்ரைனின் சபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது.இன்னும் அணு உலையின் கோர் பகுதியில் தீ ஏற்படவில்லை என்பதால் அணு உலை வெடிக்கவில்லை. ஆனால் அங்கும் தீ பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு கதிர்வீச்சு அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் உயர்ந்த அளவிலான கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதிர் வீச்சு
இது தொடர்பாக பிரபல The Associated Press ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த பகுதியில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவிகித மின்சாரத்தை இதுதான் கொடுக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அணு சக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபோரிஸியா அணு மின் நிலையம் தாக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை சரியில்லை. இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

வார்னிங்
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குளேபா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யா ராணுவம் சபோரிஸியா அணு உலை மீது துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலை என்றால் அது உக்ரைனில் இருக்கும் சபோரிஸியா அணு உலைதான். இங்கு தற்போது மிகப்பெரிய அளவில் தீ பற்றிக்கொண்டு உள்ளது. தீ அங்கு வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் வெடித்தால் நிலைமை மோசமாகும்.

செர்னோபில்
செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக சேதத்தை இது ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு உள்ளார். அப்பகுதியில் இருக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று ஹெலிகாப்டர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து ரஷ்யா விடாமல் தாக்கி வருகிறது. இதனால் அங்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியவில்லை. இந்த பகுதியில் உடனே ரஷ்யா போர் நிறுத்தத்தை தற்காலிகமாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மேயர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

செர்னோபில் கொடூரம்
செர்னோபில் அணு உலை 1986ல் ஏப்ரல் மாதம் வெடித்து சிதறியது. அந்த அணு உலையில் செய்யப்பட்ட சோதனை ஒன்றின் போது திடீரென செர்னோபில் அணு உலையின் மின்சார உற்பத்தி நின்று போய், பின்னர் அணு உலை வெடிப்பிற்கு அது காரணமாக அமைந்தது. உக்ரைனில் பிரிப்யாட் என்ற பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்தது. ரஷ்யா, உக்ரைன் எல்லாம் அப்போது ஒன்றாக சோவியத் யூனியனுக்கு கீழ் இருந்தது. இந்த விபத்தின் ஆபத்து விகிதம் 7 என்று குறிக்கப்பட்டது. இதுதான் அணு உலை வெடிப்புகளில் குறிப்பிடப்படும் அதிகபட்ச ஆபத்து விகிதம் ஆகும். இந்த விபத்தில் 100 பேர் நேரடியாக மரணம் அடைந்தனர். கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மூலம் இந்த செர்னோபில் விபத்தில் 96 ஆயிரம் பேர் வரை மடிந்தனர். இப்போது இந்த செர்னோபில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications