குழந்தைகள் ஆபாச படம்... உக்ரைன் வலைத்தள நிறுவனருக்கு 30 ஆண்டுகள் சிறை : அமெ. கோர்ட் உத்தரவு
நியூயார்க்: சிறுவர் - சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை வெளியிட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆபாச வலைத்தள நிறுவனருக்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் படங்களை இணையத்தில் வெளியிடுவதும், அதை பார்வையிடுவதும் குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க, தடை செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த மேக்சிம் ஷிங்காரென்க்கோ என்ற வலைதள நிறுவனர் தனது வலைதளத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை வெளியிட்டார்.
அவையனைத்தும் சிறுவர்- சிறுமியரை உடலுறவில் ஈடுபடுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 600 பேர் ஒளிப்பதிவு செய்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேக்சிம் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு மேக்சிமை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்போது அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
அதன்படி, அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்ட மேக்சிம் மீது கடந்த 18 மாதங்களாக நியூ ஜெர்சி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில், செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்துவதாக கோர்ட்டில் தெரிவித்தார் மேக்சிம். ஆனபோதும், நீதிபதி அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications